Sunday, 15 June 2014

Knife Painting


Balle Dancer in Knife Painting


கத்தியால் வண்ணத்தை எடுத்து படத்தில்

வரைய வேண்டும்.














கேன்வாஸ் போர்டில் கத்தியால் நான் வரைந்த எண்ணெய் ஓவியம்.


1 கேன்வாஸ் போர்டு தேவையான அளவில் எடுத்துக் கொள்க.

2 பென்ஸிலால் அல்லது கார்பன் பேப்பர் உதவியுடன் படத்தை  வரைந்து             கொள்க.

3 பெயின்டிங் பண்ணுவதற்கு என்றே பல அளவுகளில் கத்தி கிடைக்கிறது.
அதை வாங்கிக் கொள்ளவும்

4. ஆயில் பெயின்ட் வாங்கிக் கொள்க.

5 கத்தியில் பெயின்டை எடுத்துக் கொண்டு படத்தில் வரைய வேண்டும்.


அவ்வளவு தான் படம் தயார். ஆயில் பெயின்ட் உடனேயே காயாது. இதனால் செளகரியமும் உண்டு, அசெளகரியமும் உண்டு.

சீக்கிரம் காயாததால் சரி செய்து கொள்ள முடியும். கலர்கள் எல்லாம் நன்கு
( மெர்ஜ் ) கலந்து புது கலர்கள் கிடைக்கும்.

ஆனால் சற்று பெரிய தவறை சரி செய்ய வேண்டும் என்றால் அது காயும் வரை பொறுத்து இருக்க வேண்டும்.

வெயில் காலம் என்றால் 5 முதல் 7 நாட்கள் ஆகும் திருத்த. கருப்பு சீக்கிரம் காயாது. ஒரு ஓவியம் முடிந்து காய 3 மாதங்கள் விட வேண்டும். பின்பு தான் சட்டம் போடலாம்.

வண்ணங்களும் ,புதிது புதிதாய் வரும் கலர்களும் அப்பப்பா.... பார்க்கவே அழகோ அழகு.....தான்.

கலர்களைக் குழைத்து,குழைத்து எடுத்து தூரிகையால் அல்லது கத்தியால் போடுவது.......என்ன வென்று சொல்வது...வார்த்தைகள் கிடைக்கவில்லை...!!!



ஆர்.உமையாள் காயத்ரி.



8 comments:

  1. அருமையான பெயிண்டிங். பார்க்க மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  3. தாங்கள் சமையலில் தான் புலி என்று நினைத்திருந்தேன். ஆஹா, ஓவியத்திலும் புலியா நீங்கள் .

    எனக்கும் இந்த இரண்டுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப தூரமுங்க.................

    பெயிண்டிங் ரொம்ப அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அந்த மாதிரி எல்லாம் இல்லை சொக்கன். வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. ஓவியம் மிகஅருமை சகோதரி ஆனால் மற்றொரு கையையும் லேசாக காண்பித்திருக்கலாம்.

    ReplyDelete
  6. மிகமிக அழகாக வரைந்திருக்கிறீங்க.சொல்லவார்த்தையில்லை. உங்க திறமைக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete