தேவையான பொருட்கள்
மாம்பழம் - 2 ( நடு அளவு)
துவரம் பருப்பு - 3 மே.க
மஞ்சள் தூள்
எண்ணெய் - 1 தே.க
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - சிறு நெல்லி அளவு
சாம்பாப் பொடி - 1 1/2 தே.க
உப்பு - தே.அ
கருவேப்பிலை,கொத்தமல்லி - சிறிது
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/4 தே.க
சீரகம் 1/4 தே.க
வரமிளகாய் - 1
எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கவும்.
புளிக்கரைசல் விட்டு சாம்பார்ப் பொடி சேர்க்கவும். நன்கு வெ, தக்காளி வேகவேண்டும். அத்துடன் பச்சை வாசனையும் போய்விடும்.
உப்பு சேர்க்கவும்.
மாம்பழத் துண்டுகளை சேர்க்கவும்.1 கொதிவரவும்,
பருப்பை சேர்க்கவும்.
கருவேப்பிலை,கொத்தமல்லி சேர்க்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவும் இறக்கவும்.
தாளிக்கவும்.
மாம்பழ சாம்பார் சூப்பர் தான் போங்கோ....!!!
நான் சாப்பிட்டேன்..... இனி நீங்க செய்து சாப்பிட வேண்டியது தான். நல்லா ரசிப்பீங்கன்னு நினைக்கிறேன். வரட்டா...!!!
ஆர்.உமையாள் காயத்ரி.
ஆ.., மாம்பழசாம்பார்.கேள்விப்பட்டதே இல்லை. இனிமேல்தான் மாம்பழம் இங்கு வரும் அப்போ முயற்சிக்கிறேன். நன்றி.
ReplyDeleteஇங்கு இப்போது தான் மாம்பழம் வர ஆரம்பித்து இருக்கிறது. ஸீசன் அப்போ செய்வோம். அதன் உடனே செய்து விட்டேன்.
ReplyDeleteமாம்பழத்துல சாம்பாரா? புதுசா இருக்கே!
ReplyDeleteவெகு நாட்களாக எங்கள் வீடுகளில் செய்வார்கள்.
Deleteமாங்காய் பச்சடி கேள்விப்பட்டிருக்கேன். மாம்பழ சீசன்ல செய்து மனைவியிடம் செய்யச் சொல்ல வேண்டியது தான்.
ReplyDeleteசெய்யச் சொல்லி சாப்பிட்டுப் பாருங்கள்
Delete