Thursday 26 June 2014

வயது தந்த தானம் - கவிதை


கவிதை - 22


சுத்தமாய் வீடிருக்க
சுறுசுறுப்பு கூடுது
சுற்றி சுற்றி பார்க்க
இன்பச் சுவைதான் கூடுது


நட்ட நடிவில் அமர்ந்த சாமியின்
அலங்காரம் கூடிப் போனது
விளக்கேற்ற வீடு  நல்
ஒளிப்பிரவாகம் ஆனது
இன்பச் சுமையில் இறைவன் முன்
தானாய் கை கூம்பிற்று
தாளத்தோடு பஜனை செய்ய
தானாய் பாட்டு வந்தது



இல்லத்தரசியின் இனிய கடமை
இனிக்கும் சூழல் கொடுத்தது
இனிய விருந்து அமிர்தமாக
இங்கே தங்கி விட்டது
அளந்து பார்த்து இட்ட சட்டி
ஆ... என பார்த்தது
அம்மை தன்னில் அள்ளிப் போட்டு
ஆக்கும் ஆக்கல் அருமையாகப் போனது

வயது தந்த தானம் நிதானம்
வாழ்க்கையை செழிப்பாய் மாற்றிற்று
அல்லல் படும் வேலையில்லை
அழகாய் காரியம் பூத்தது

முதுமை புரிய முழுமையடையும்
மூப்பு தந்த அனுபவம்
மனோ வேகத்தடையும் வேண்டும்
நடக்கும் பூமி பார்த்திட
இருத்தல் இடம் அறிய வேண்டும்
இனிமேல் செயல் ஆற்றிட
சோறு உண்ண பசியும் தனியும்
நீண்ட நடை போட்டிட...!!!





ஆர்.உமையாள் காயத்ரி.




9 comments:

  1. வணக்கம்

    சிந்தனைக்கு அறிவான கவிதை தந்துள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கருத்துள்ள உண்மை வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. //வயது தந்த தானம் நிதானம்
    வாழ்க்கையை செழிப்பாய் மாற்றிற்று.// வயதுடன் அனுபவம் சேர்ந்தால் பக்குவம் வந்திரும்.
    அழகான கவிதனை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
    http://blogintamil.blogspot.in/2014/06/kadal-kanthum-valarum-thamizh.html

    ReplyDelete
  5. சிறப்பான கவிதை அனுபவ வரிகள்..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்..

    http://pandianinpakkangal.blogspot.com

    ReplyDelete
  6. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ...!
    சிறப்பான கவிதை வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  7. ஒவ்வொரு வரியும் ஆழ்ந்த கருத்தையும், சிந்தனையையும் காட்டுகிறது. நல்லொதொரு சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete