Thursday, 12 June 2014

வெந்தயக் குழம்பு




தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 8
சாம்பார்ப் பொடி - 11/2 or 2 தே.க
உப்பு - ருசிக்குஏற்ப
வெல்லம் - சிறிது
தேங்காய் துருவல் - 3 மே.க ( இதை பாலாக எடுத்து வைத்துக் கொள்ளவும் )

தாளிக்க வேண்டியவை
நல்லெண்ணெய் - 5 or 6 மே.க
கடுகு - 1/4 தே.க 
பெருங்காயம் - சிறிது
கருவேப்பிலை -சிறிது






வெந்தயம் - 3/4 தே.க
துவரம் பருப்பு - 2 தே.க

இவற்றை சிவக்க வறுத்து விட்டு பொடியாக பண்ணிக் கொள்ளவும்.





தாளிக்கவும்.









வெங்காயம் சேர்த்து சற்று வதக்கிய பின்,






பூண்டைசேர்த்து சற்று வதக்கிய பிறகு,





 


தக்காளி சேர்க்கவும்.தக்காளியும் நன்கு வெந்து குழையவும்








சாம்பார்ப் பொடி சேர்க்கவும்
 சாம்பார்ப் பொடியின் பச்சைவாசனை போனபின்,                    








சுருள கிண்டிக்
கொண்டு இருக்கும் போது எண்ணெய் கக்கிவரும்.


.








இப்போது புளிக் கரைசலை ஊற்றவும்.








புளிக்கரைசல் நன்றாக கொதித்து கெட்டியாக வரும் போது ( 10 or 15 நிமிடங்கள் குறைந்தது ஆகும் )






தேங்காய் பாலை ஊற்றவும். 2 கொதி வரவும்,








பொடித்து வைத்து இருக்கும் வெந்தயம்,  து.பருப்பு பொடியை
சேர்த்து விட்டு வெல்லத்தை போடவும்.




அடுப்பை அணைத்து விட்டு கிண்டினால் குழம்பு ரெடி.....!!!
1 மே.க  நல்லெண்ணய்யை மேலே விடவும்.




குழம்பு சற்று தளர இருக்க வேண்டும். பொடி போட்டு இருப்பதால் ஆறின பின்பு சேர்ந்து கொட்டியாகும். பார்த்துக் கொள்ளுங்கள்.( உங்க எல்லோருக்கும் தெரியும்....ஆனாலும்....ஹி ஹி ஹி....சொல்லுறதை சொல்லிடனும் இல்ல... )

                                     மணமான வெந்தயக் குழம்பு தயார்....!!!   

இக் குழம்பு செய்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது.  ஒரு சகோதரியின் கோரிக்கையால் இன்று  மீண்டும் செய்து உண்டு மகிழ்ந்தோம்.

சகோதரி நீங்களும் செய்து பாருங்கள்....

வெயில் காலத்திற்கு ஏற்ற குளிர்ச்சியான குழம்பு.....!!! 

குறிப்பு:

பச்சை தேங்காய் கிடைக்காவிட்டால்,  Dry தேங்காய் பொடியை வெந்நீரில் போட்டு ஊறவிடவும். பின் வடி கட்டி பிழிந்து விட்டு சமையலுக்கு பயன் படுத்தலாம். பச்சை தேங்காய்ப்பூ போல் இருக்கும். எண்ணெய் சிக்கலும் வீசாது. கொழுப்பு அதிகமாகிவிடும் என்கிற பயமும் சற்று குறையும். வெந்நீரில் எண்ணெய் கொஞ்சம் போய் விடும் அல்லவா...

இதை மிக்ஸியில் போட்டு அடித்து பால் எடுத்துக் கொள்ளலாம். நான் இது போல் தான் செய்து பால் எடுத்தேன்.

டின் தேங்காய்பாலும் உபயோகப் படுத்தலாம்.




ஆர்.உமையாள் காயத்ரி.



6 comments:

  1. கடந்த பதிவில்தான் சகோதரர் சொக்கன் அவர்கள் கேட்டிருந்தார்கள். அடுத்த பதிவா பகிர்ந்திருக்கிறீங்க. ரெம்ப நன்றி. எனக்கும் வெந்தயகுழம்பிற்கும் தூரம் அதிகம் . என் மாமியார் தொக்காக செய்து அனுப்பிவைப்பார். என்னவருக்கு ரெம்ப பிடிக்கும்.இனிமேல் செய்து அசத்துவோம் உங்க குறிப்பின் உதவியுடன். ரெம்ப நன்றி பகிர்விற்கு.
    கேள்வி> பொரித்து ஏதாவது காய்கள் போடலாமா அல்லது இப்படியேதானா.

    ReplyDelete
  2. காய்கள் தேவை என்றால் போட்டுக் கொள்ளலாம். பொதுவாக இப்படித் தான் செய்வோம். நம் விருப்பம் தான் - சமையல். ( வெண்டைக்காய் கத்தரிக்காய் நன்றாக இருக்கும்.) எப்போதும் காய் சேர்த்து பண்ணுவதால் ஒரு மாறுதலாக இருக்கும். சில சமயம் காய்கள் இல்லாவிட்டாலும் உடனே செய்யலாம் இல்லையா..? அதனால் தான் அந்தக் காலத்தில் இவ்வாறு செய்து இருப்பார்கள் என நினைக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  3. சத்தான குழம்பு.. செய்முறை குறிப்பிற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  4. மிக்க நன்றி சகோதரி . சென்ற பதிவில் கேட்டதற்கு அடுத்த பதிவிலேயே எழுதி விட்டீர்கள். என் மனைவி தங்களுக்கு நன்றியை சொல்லச்சொன்னாற்கள். மேலும் செய்து பார்த்து விட்டு கூறுகிறேன் என்று கூறினார்கள்

    ReplyDelete
  5. நன்றி.நாங்களும் உண்டு மகிழ்ந்தோம். ருசித்த பின் சொல்லுங்கள்.

    ReplyDelete