இன்றைய சேதி என்னவென்றால்….
டும் டும் டும்…..
அதாகப்பட்டது…..
வலைப்பூ வாசிகளுக்கு ஒரு பத்துக் கேள்விப் பூச் செண்டு வருது வருது….. பராக்….! பராக்….!
பூச்செண்டு கொடுத்து
என்னை இந்த வலையில் அன்பாக தள்ளியது சகோதரர் சொக்கன் அவர்கள் தான்.
என்ன… இதுன்னு
ஷாக் ஆகிட்டேன்…..! சரி. இப்படி ஒரு 10 கேள்விக்கு நான் எழுதின பதில் தாங்க கீழே…
1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
என்னுடைய 100 பிறந்தநாளை
நான் கொண்டாடுவதை விட என் சந்ததியினர் என்னை மறவாமல் நினைத்து கொண்டாடும் அளவு வாழ்ந்து
செல்ல விரும்புகிறேன்.
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
கற்றுக் கொள்ள
விருப்பம் என்றால் - எல்லாவற்றையும் கற்றுக்
கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. முடியாது தான். ஆனால் அது பேராசை தான். ஆசைப் படுவதில்
எதற்கு கஞ்சத்தனம். ஒவ்வொரு நாளும், நிமிடமும் எனக்கு தெரியாததை கற்றுக் கொண்டு தான்
இருக்கிறேன்.
3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
சாப்பிட தயார்…!
என்று என் வலைப் பூவில் பதிவு எழுதும் போது சிரிப்பு வந்தது. சிரித்துக் கொண்டே தான் எழுதி முடித்தேன்.
4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
அப்புறம் செய்யலாம் என விட்டு வைத்திருந்த வேலைகளை
முடிப்பேன். எதிர் கட்டடத்தில் பறக்கும் கொடியை வேடிக்கை பார்ப்பேன். கரண்ட் போனப்போ....(கொஞ்ச நேரம் கரண்ட் போன பொழுது) மின்சாரக் கண்ணா…! அப்படின்னு வலைப்பூவில் எழுதி இருந்தேன்.
எங்கள் பால்கனியில் இருந்து பார்த்தால் கடல் தெரியும் அதை பார்ப்பேன். வானம்
பார்ப்பது மிகவும் பிடித்தது.
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல
விரும்புவது என்ன?
நீங்கள் இருவரும்
தோழர்களாக இருங்கள். தோழர்களாக நினைக்கும் போது ஈகோ வராது. எல்லாவற்றையும் பகிர்ந்து
கொள்ளுங்கள். இருவரும் அடுத்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயலுங்கள். அதில் அவர்
அவர் விருப்பமும் நிறை வேறும் அல்லவா..? ஒருவர் செய்யும் காரியங்களை மற்றவர் பாராட்ட
தயங்காதீர்கள். பாராட்டுக்கள் வாழ்க்கைக்கு ரெம்ப முக்கியம். நாம் கவனிக்கப் படுகிறோம்
என்பதே…காதலை பெருக்கும். விட்டுக் கொடுத்து வாழ பழகிக்கொள்ளும் போது முதலில் கஷ்டமாக
இருந்தாலும் பிறகு பலன்கள் அற்புதங்களை நிகழ்த்தும்.
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால்
எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
உலக குழந்தைகள் அனைவருக்கும் கல்வி. அரசாங்கமே கல்வித் தொகை
வழங்கி ஆதரிக்க செய்வேன்.
7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என்னவரிடம் தான்.
8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
வேறு வேலை இல்லாதவர்கள்
என்ன செய்வார்கள்…? பாவம். நேரடியாக பேசினால் விளக்கிவிடுவேன். மனசாட்சி படி நடப்பதால்
கவலையில்லை.
அவர்கள் ஜீரண சக்திக்கு
நாம ஒரு உதவியாக இருப்பதே நல்லது தானே.
மக்கள் நம்மளை
மறக்காமல் நினைத்து கொண்டு இருக்கிறாகளே… என சந்தோஷப்படுவேன்.
9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
தோழியின் கைகளைத் தொட்டு தட்டிக் கொடுப்பேன். வார்த்தைகள் வராது.
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
இதனால் நான் சொல்லிக்
கொள்வது என்னவென்றால், வலைப்பூ ஆரம்பித்ததே இதனால் தான். அதுவும் எழுதி பதிவு போட
எனத்தான் ஆரம்பித்தேன். நான் அவ்வப்போது தான்….. எழுதுவதால், அவ்வப்போது சமையல் போடலாம்
என நினைத்தேன். வித விதமாக சமைக்கும் நாம்
ஏன்…? அவ்வப்போது போடவேண்டும். எதை எப்போது செய்கிறோமோ அதை போடலாம், எழுத்தும், சமையலும்
என என் எண்ணங்கள் உங்கள் முன்னே. How is it…? Super இல்ல…!!!
நீளமான தொடராக உலாவும் பதிவில் நான் இழுத்து விட நினைத்த சிநேகமானவர்கள் எல்லோரும் ஏற்கனவே அழைக்கப்பட்டு
விட்டார்கள். ஆகையால் விட்டு விட்டேன்.
அப்பாடா....!!!
ஆர்.உமையாள் காயத்ரி.
என்னங்க இந்த தொடரை நான் ஆரம்பித்து வைத்தேன் அது தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது உங்க பதிவை பார்த்த பின் நீங்கள் மூடு விழாவை நடத்தி இருக்கிறீர்கள். இது நல்லா இல்லை சொல்லிப் புட்டேன்... நீங்கள் அனுபவித்த இன்பத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கனம் அதனால கண்டிப்பாக நீங்க யாரையாவது தொடருக்கு கூப்பிடனும் இல்லையென்றால் காக்கா வந்து கண்ணை கொத்திபிடும்...ஜாக்கிரதை
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
Deleteஎன்னோட வேண்டுகோளுக்கு இணங்க, பதில்களை சொல்லியதற்கு நன்றி சகோதரி.
ReplyDeleteபதில்கள் அனைத்தும் அருமை.
"//ஆசைப்படுவதில் எதற்கு கஞ்சத்தனம்//" - அட, ஆமால்ல...
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
Delete/// ஒவ்வொரு நாளும், நிமிடமும் எனக்கு தெரியாததை கற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். ///
ReplyDeleteஅப்படிச் சொல்லுங்க...
வாழ்த்துக்கள்...
தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
Deleteநானும்...
ReplyDeleteசொடுக்குக : பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்...!
நன்றி...
சொடுக்குகிறேன். நன்றி.
Delete1 வது 6 வது 9 வது மிகமிக அருமை சகோதரியாரே....
ReplyDeleteதங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
Delete6. சிம்ப்ளி சூப்பர்ப் உமையாள்.
ReplyDelete// 9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
தோழியின் கைகளைத் தொட்டு தட்டிக் கொடுப்பேன். வார்த்தைகள் வராது.// இது... !!
தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி இமா.
ReplyDelete//ஒருவர் செய்யும் காரியங்களை மற்றவர் பாராட்ட தயங்காதீர்கள். பாராட்டுக்கள் வாழ்க்கைக்கு ரெம்ப முக்கியம்./// மிகச்சரியாக சொன்னீர்கள்.
ReplyDeleteசிம்பிளா அழகா எழுதியிருக்கிறீங்க உங்க கருத்துக்களை. வாழ்த்துக்கள்,நன்றி.
பிஸியிலும் வந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரியாரே...!
ReplyDelete