Tuesday 3 June 2014

Puliyotharai புளியோதரை







தேவையான பொருட்கள்

வறுக்க தேவையானவை
மல்லி - 1 மே.க
கடலைப் பருப்பு - 1 மே.க
மிளகு - 1 தே.க
வெந்தயம் - 3/4 தே.க

மிளகாய் - 6 or 7
கொப்பரை துருவல் - 2 மே.க
எள் - 2 மே.க
பெருங்காயம்- சிறிது .




எல்லாவற்றையும் நன்கு வறுத்து, பின் பொடி செய்து கொள்ளவும்.

பொடி சற்று கொர கொரப்பாக இருக்க வேண்டும்.


தாளிக்க வேண்டியது

நல்லெண்ணெய் - 10 மே.க
கடுகு - 1 தே.க
கடலைப் பருப்பு - 1 1/2 தே.க
உளுத்தம் பருப்பு - 1 1/2 தே.க
மிளகாய் - 4 or 5
பொட்டுக்கடலை - 1 கையளவு
கருவேப்பிலை - சிறிது


தாளிக்கவும்.



தாளித்தபின் ஆரஞ்சுப் பழம் அளவு புளியை கரைத்து விடவும்.

மஞ்சள் தூள் சேர்க்கவும்.

நன்கு கொதித்து புளியின் பச்சை வாசம் போன பின் அரைத்து வைத்த பொடியை போடவும்.

உப்பு சேர்க்கவும். எண்ணெய் கக்கி வரவும் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும்.





R.umayal Gayathri.


3 comments:

  1. வணக்கம்.
    தங்களை இப்பொழுது தான் தொடர ஆரம்பித்துள்ளேன்.

    ReplyDelete
  2. பார்க்கும் போதே நாவில் நீர் ஊருகிறது.

    ReplyDelete
  3. ஆகா ஆகா - அன்பின் உமையாள் காயத்ரி - புளியோதரை அருமை - செய்முறை சிறப்பு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete