தேவையான பொருட்கள்
கேரட் - 1 கோப்பை
உருளைக்கிழங்கு - 1 கோப்பை
பீன்ஸ் - 1 கோப்பை
பட்டாணி - 1/2 கோப்பை
வெங்காயம் - 1 எலுமிச்சை -1
தக்காளி - 1 நறுக்கிய வெங்காயம் - சிறிது
சீரகம் - 1/2 தே.க நறுக்கிய கொத்தமல்லி - சிறிது
வெண்ணெய் - 1 மே.க
மஞ்சள் தூள் - சிறிது
சீரகத்தூள் - 1/4 தே.க
பாவ் பாஜி மசாலா தூள் - 3 தே.க
மல்லித்தூள் - 1 தே.க
மிளகாய்பொடி - 1/2 தே.க
கேரட்,உ.கிழங்கு,பீன்ஸ் இவற்றை அரை உப்பு போட்டுவேகவிடவும்.
வெண்ணெய் விடவும்.
சீரகம் தாளிக்கவும்
வெங்காயம் சேர்க்கவும்
பட்டாணி சேர்க்கவும்.
.
தக்காளி சேர்க்கவும்.
காய்கறிகளை பட்டும்,படாமலும் மசித்து சேர்க்கவும்.
பொடிகளைச் சேர்க்கவும்.
முதலிலும்உப்பு சேர்த்து இருக்கிறோம் எனவே மீதியை பார்த்து போடவும். நன்கு மசாலாவின் பச்சை வாசனை போய் சேர்மானம் வந்தவுடன் இறக்கவும்.
வெங்காயம்,மல்லி தூவி
அதில் எலுமிச்சை சாறு பிழிந்து உடன் பாவ் பன்னை நெய்தடவி தேசைக்கல்லில் போட்டு எடுத்தால் ரெடி....!
தினமும் நம் சமையல் செய்து,செய்து சாப்பிட்டு..... ok ok
மாறுதலுக்காக அவ்வப்போது வட நாட்டு சமையல் செய்து சாப்பிடுவோம் இல்லையா....! அதாங்க போட்டு இருக்கிறேன். நீங்களும் Try பண்ணுங்க.
வாங்க செய்யலாம்...
வடநாட்டு சமையல்...!!!
வாக்கிங் போகும் போது
வாங்கி வந்தால்...!
ஆக்கி உண்ணலாம்...!!!
ஆர்.உமையாள் காயத்ரி.
எனக்கு பொதுவாக இந்த வடக்கத்திய சாப்பாடு அவ்வளவாக பிடிக்காது. என் மனைவிக்கு மிகவும் பிடிக்கும். அவர்களை இதை படிக்கச் சொல்கிறேன்.
ReplyDeleteபாவ்பாஜி செய்முறை ஈஸியா இருக்கு.செய்து பார்க்கவேண்டும். பாவ்பாஜி மசாலாதூள் போடவேண்டுமா. இங்கு இல்லை. அதுதான் கேட்டேன்.குறிப்புக்கு ரெம்ப நன்றிகள்.
ReplyDeleteபாவ்பாஜி மசாலாவிற்கு பதில் கரம்மசாலா சேர்த்து செய்யலாம். கரம்மசாலா அளவு சற்று குறைவாக சேர்த்துக் கொள்ளவும். நான் இது போல் செய்து இருக்கிறேன். நன்றாக இருக்கும். முயன்று பாருங்கள் சகோதரி.நன்றி.
Delete