தென்னங்கன்று வளர்த்து
தேனாக உரமிட்டு
பானக்கமாய் நீர் ஊற்றி
பத்திரமாய் வளர்த்து விட்டு
பூ பூத்து காய் காய்க்க
புது இடம் மாற்றி வைத்து
காவலுக்கு வேலியிட்டு
கடமையாய் தள்ளி நிற்க
புதிதாய் இருக்கையிலே
புது காற்று வீசயிலே
புல்லரித்துப் போனது...!!!
மாற்றி மாற்றி காற்றடிக்க
மதி சற்று கலங்கிற்று
புது சூழல் -
புரியவில்லை...?
விழி நீர் சூடா...!...?
வேர் நீர் சூடா...!...?
தணலாய் வெயிலடிக்க
தணல் உள் தகதகக்க
மாற்றி வச்ச கன்றது
மணக்குதா...? எனப் பார்க்க -
மனமக்கள் வந்திடவே
மருட்சி அறிவு சொன்னது
மலர்ந்து தலையாட்டு என்று
ஆட்டிற்ற தலையதில்
அகமகிழ்த்து போனார்கள்
தந்தை போன பின்பும்
தாயுணர்வு நூல் அதில்
தாங்கிற்று காலம்
கால் வயது கடந்த பின்
நூல் அறுந்து போனது
நோய் வந்து புகுந்தது
பணம் காசு பலமுண்டு
பாசம் வைக்க எவருண்டு...?
பின் வந்து பிறந்ததால்
உடன் பிறந்தும் தனித்தானது
உருண்டு விளயாட
உடன் வயது யாருமில்லை
செல்லமாய்ப் போனதால்
தாய் தந்தையின்மை
பொருங் குறையாகப் போனது
தாய் தந்தை வட்டத்திற்கே
குழந்தை மனது ஏங்குது
வளர்ந்து முதிர்வானாலும்
வாட்டம் அங்கே தொக்கி நிற்குது
நட்பாய்...
உண்மைப் பண்புகள்
பகிர்ந்த சுகமும் -
நேர்பித்த - அன்பும் கண்டனமும்
நேசம் மறைந்து போனதால்
பலம் அது போனதே...
உடம்பிற்கு -
பல வித பலகாரம்...
உள் மனத்திற்கு
ஒரு வித பட்டினி விரதம்
தாய் தந்தை விட்டுச் சென்றது
குழந்தைகளுக்கு இடையே
போதிய இடைவெளி தேவை
இடைவெளியே -
தலைமுறைக்கு இணையாகாமல்
இருத்தல் நலம் அல்லவா...?
அம்மை அப்பனின்
அன்பும் அரவணைப்பும்
ஆத்மாவுக்கு கூடுதல் காலம் கிடைக்க
வேண்டும் அல்லவா....?
விதியென
விவாதிப்போர் உண்டு
வீண் வாதம் தேவையில்லை
பிஞ்சு மனத்தின்
கொஞ்சும் மொழி
அன்பிருந்தால் புரியும்.
ஆர்.உமையாள் காயத்ரி.
"//தாய் தந்தை வட்டத்திற்கே
ReplyDeleteகுழந்தை மனது ஏங்குது
வளர்ந்து முதிர்வானாலும்
வாட்டம் அங்கே தொக்கி நிற்குது//"
உண்மை தான் எத்தனை வயது கடந்தாலும் தாய் தந்தையின் பாசத்திற்கே மாநாடு ஏங்குகிறது.
வழ்ழ்த்துக்கள் சகோதரி
நன்றி.
ReplyDeleteவிழி நீர் சூடா...!...?
ReplyDeleteவேர் நீர் சூடா...!...? அருமை.