Wednesday, 2 July 2014

வாழைக்காய் சாப்ஸ்




தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 2
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது

தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 3 (அ) 4 மே.க
பட்டை - 1
பிருஞ்சி இலை - 1

அரைக்க தேவையானவை

தேங்காய் துருவல் - 2 1/2 மே.க
பொட்டுக்கடலை - மே.க                            
சோம்பு - 1/2 தே.க
மிளகாய் - 3  (அ) 5
கசகசா - 1/4 தே.க


எல்லாவற்றையும் தண்ணீர் இல்லாமல் அரைத்துக்கொள்ளவும்.






தாளிக்கவும்.











வெங்காயத்தை வதக்கவும்.











தக்காளியை வதக்கவும்.








வாழைக்காயை உப்பு சேர்த்து முக்கால் பதமாக வேகவைத்துக் கொள்ளவும்.








அரைத்ததை சேர்க்கவும்.












வாழைக்காயைச் சேர்க்கவும்.










தண்ணீர் தெளித்து நிதானமாக வேகவிடவும்.









நன்கு மசால் காயில் சார்ந்து எண்ணெய் கக்கி வருகிற வரை கிண்டவும்.






                                   செட்டி நாட்டு வாழைக்காய் சாப்ஸ் ரெடி....!!!


      இதே போல் பலாக்காயை கொண்டும் செய்யலாம். பலாக்காய் சாப்ஸ்...!!!




ஆர்.உமையாள் காயத்ரி.



9 comments:

  1. அருமை சகோதரி! கண்ணைப் பறிக்கிறது நிறம்!

    ஈஸியான குறிப்புத்தான். ஆமா இதையே உ.கிழங்கில் செய்யலாம்தானே.
    கைவசம் எப்பவும் உ.கி இருக்கும். வாழைக்காயெனில் கொஞ்சம் சிரமம் தான்.
    அதுதான் கேட்டேன்.

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. நல்லா...செய்யலாம். நம்முடைய விருப்பம் தான். உ.கி - ல் மாவு சத்து அதிகம். எனவே எளிதில் குழைந்து விடும்.எனவே செய்யும் போது குழையாமல் பார்த்து செய்து கொள்ள வேண்டும் அவ்வளவு தான். நன்றி இளமதி.

      Delete
  2. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. தயிர் சாதத்தோட சாப்பிட்டால் ரொம்ப நன்றாக இருக்கும்.
    பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  4. நல்ல குறிப்பு.வாசிக்கும்போதே நினைத்தேன் உ.கிழங்கில் செய்யலாமா என . இளமதி கேள்வி கேட்டுவிட்டா. பகிவுக்கு நன்றி.

    ReplyDelete
  5. இன்றைக்கு செய்தேன்,மசாலா சுவையாக இருந்தது,வீட்டில் பாராட்டு கிடைத்தது.

    ReplyDelete
  6. பார்க்கவே சாப்பிடும் ஆவல் வருகிறது.

    ReplyDelete
  7. உங்கள் படமும் குறிப்பும் உடனே செய்யத்தூண்டியது. இன்று செய்து விட்டேன். நல்ல குறிப்பு. ருசி அபாரம்!! மிளகாய் வற்றலுக்கு கலர் இருக்காது என்பதால் அதற்கு பதில் மிளகாய்த்தூள் சேர்த்துக்கொண்டேன்!

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி

    தங்கள் செய்முறை மிகவும் அற்புதம். படங்களும், செய்முறையும் செய்து சுவைக்கத் தூண்டுகிறது. அவசியம் இது போல் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete