கடல்
உப்புப் பாலின் நுரைகண்டேன்
ஆர்.உமையாள் காயத்ரி.
உப்புப் பாலின் நுரைகண்டேன்
உவப்பாய் காற்றின் ருசிகண்டேன்
மணலில் கால் தடம்கண்டேன்
மனம் சற்று நிற்கக்கண்டேன்.
கவிதை தானாய் பெருகநின்றேன்
வரிசையாய்யழைத்த அலையின்முன் கை
வாரியணைக்க பயம் கொண்டேன்
காலைதழுவிட விட்டாலோ நீ
கட்டிய ஆடைக்கு முயன்றுமுத்தமிடுவாய்
முத்தம்தவிர்க்க முயன்றேன் தினம்
முடியாமல் தோற்றேன் உன்னிடம்தினம்
கொடுக்கும் குணமுனக்கு அட்சயமாம்
கொட்டாரம் வந்தால் விடுவாயா.?
அன்பு முத்தம் ஆசையாய்
ஆனந்தக் கவிதை ஊமையாய்.
வணக்கம்
ReplyDeleteகவிதை வரிகள் மிக அற்புதம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உடன் வந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரரே.
Deleteஉப்புக்கவிதையும் இனிக்குமாம்,,,,
ReplyDeleteகடலும், மணலும் இணக்கமாம்,,,
ஊமை வரிகள்கூட பேசுமாம்,,,
கவிதை நன்று சகோதரி.
ஆஹா...கவிதையிலே...கருத்திட்டமைக்கு நன்றி சகோதரரே.
Deleteகலையும் நினைவுகள் காற்தடம் காண
ReplyDeleteஅலையொடு பாடியதோ ஆழ்ந்து!
அருமையான நினைவலைகள்!
வாழ்த்துக்கள்!
கலையும் நினைவுகள் காற்தடம் காண
Deleteஅலையொடு பாடியதோ ஆழ்ந்து!
நன்றி. சகோதரி.
"காலைதழுவிட விட்டாலோ நீ
ReplyDeleteகட்டிய ஆடைக்கு முயன்றுமுத்தமிடுவாய்
முத்தம்தவிர்க்க முயன்றேன் தினம்
முடியாமல் தோற்றேன் உன்னிடம்தினம்" என்ற
சிறந்த வரிகளை விரும்புகிறேன்
ரசித்து,தொடர்ந்து, கருத்திடுவதற்கு நன்றி சகோதரரே.
Deleteஆஹா அருமையான ரசனைமிக்க ஒரு கவிதை.
ReplyDelete"//கட்டிய ஆடைக்கு முயன்றுமுத்தமிடுவாய்
முத்தம்தவிர்க்க முயன்றேன் தினம்
முடியாமல் தோற்றேன் உன்னிடம்தினம்//"
அட, கடல் அலையையும் காதலின் வரிகளாக்கி விட்டீர்கள்.
கடலும்..அலையும் அற்புதமான ஒன்றல்லவா..?
Deleteரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரரே..