பாடல்
மதுரா நகரத்து கிருஷ்ணய்யா
மனங்களைக் கவர்ந்த கண்ணய்யா
குழல் எடுத்து நீ ஊதினால்
குழைந்து போகாதோ எங்கள் நெஞ்சம் (மதுரா)
மதுரம் மதுரம் உந்தன் பெயர்
மயக்கும் சிரிப்போ மதுர அலை
உள்ளம் கொள்ளை போனதனால்
உந்தன் பால் கரைந்ததடா (மதுரா)
மதுரமே உந்தன் ரூபமாகும்
மாயை உந்தன் லீலையாகும்
மதுக்கடல் சயனத்தில் கண்மூடி
உலகை புன்னகைத்து நோக்குகிறாய் (மதுரா)
கான்வாஸ் - ஆயில் ஓவியம்
அழகான கிருஷ்ண கானத்தை என்னுள் இருந்து வெளிப்படுத்திய
ஶ்ரீ கிருஷ்ணருக்கு நன்றி.
ஓவியத்தை முன்பு புகைப்படமாக எடுத்தது. சற்று தெளிவாக வரவில்லை.
ஆர்.உமையாள் காயத்ரி.
வணக்கம்
ReplyDeleteசொற்சுவை ததும்ப
நிதங்களை நேகிழவைக்கும்
கானம் கண்டு உவகைகொண்டேன்
பாடிப் பரவமடைந்தேன்
பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மதுரகானம் மயக்குதே மனதை!..
ReplyDeleteஇதுகைவண்ணம் ஈர்க்குதே கண்ணை!...
அருமை!
வாழ்த்துக்கள் சகோதரி!
நன்றி சகோதரி.
ReplyDeleteஇந்த கிருஷ்ண கானம், எங்களின் மனதையும் மயக்குகிறதே.
ReplyDeleteதங்களின் படமும் அழகாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.
நன்றி.
Deleteஅழகான படம், அழகான பாடல். நீங்கள் சகலகலாவல்லிதான். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி பிரியசகி.
Deleteமதுரம் போல் இனிக்கிறது கானம்.
ReplyDeleteநன்றி .
ReplyDelete