Saturday, 26 July 2014

கருவேப்பிலைப் பொடி

தேவையான பொருட்கள்

து.பருப்பு - 3/4 கோப்பை
உ.பருப்பு - 1/2 கோப்பை
க.ப்ருப்பு - 1/4 கோப்பை
மிளகு - 1 1/2 தே.க
சீரகம் - 1 1/2 தே.க
மிளகாய் - 1
பெருங்காயம் - சிறிது
உப்பு - தே.அ




புளி - சிறு நெல்லி அளவு


கருவேப்பிலை - 5 கை அளவு
( கருவேப்பிலை - இன்னும் 2 அ 3 மடங்காக போட்டுக் கொள்ளலாம். இங்கு கிடைக்காததால் வந்ததை பொட்டு இருக்கிறேன். கூடுதல் போட்டால் கலர் நன்றாக வரும்.)







பொன்னிறமாக வறுக்கவும்.









சீரகத்தை தனியாக வறுக்கவும்.








மிளகை வறுக்கவும்.மிளகு வெடிக்கும் என்பதால் மூடி போட்டுக் கொள்க.








பெருங்காயத்தை வறுக்கவும்.








உப்பை வறுக்கவும்.











கருவேப்பிலை நீர்பதம் இல்லாமல் வறுக்கவும்.







புளியை உதிர்த்து போட்டு வறுக்கவும். நிதானமாகத்தான் வறுபடும்.





எல்லா பொருட்களும் ஆறின பின்பு சற்று கொர கொரப்பாக பொடிசெய்து 

கொண்டால் கருவேப்பிலை பொடி உங்கள் வீட்டில் ரெடி.

அப்புறம் என்ன சூடான சாதத்தில் போட்டு நெய் ஊற்றி சாப்பிட 

வேண்டியது தான். அந்தே. 




வாசம் வருகிறதே....ஓ பரவாயில்லையே....அவ்வளவு 

வேகமாக  செய்து விட்டீர்கள். அப்புறம் என்ன..? அப்படிங்குரீங்க... சரி...  

சரி  சிவ பூஜைல கரடியா இல்லாம நான் வரேன். சாப்பிடுங்க.



ஆர்.உமையாள் காயத்ரி.



11 comments:

  1. வணக்கம்
    சகோதரி
    செய்து பாரக்கிறோம்.... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி

      Delete
  2. செய்து பார்ப்போம்...
    சகோதரி எனது பதிவு ''விசித்திகன்''

    ReplyDelete
  3. பயன்தரும் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி

      Delete

  4. வணக்கம்!

    கருவேப் பிலைப்பொடி செய்கலை கற்றேன்!
    குருவே எனவுனைக் கொண்டு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்

      நன்றி ஐயா.

      Delete
  5. புதுவிதமான செய்முறை...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டி.டி.அவர்களே.

      Delete
  6. செய்து பார்க்கிறோம். இங்கு சில நண்பர்கள் தங்களின் வீட்டுத் தோட்டத்திலிருந்து கருவேப்பிலையை மரத்திலிருந்து ஒடித்து மூட்டையாக கட்டி மற்ற நண்பர்களுக்கு கொடுப்பார்கள். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் இந்த மாதிரி கருவேப்பிலை பொடி, கருவேப்பிலை கொழம்பு என்று கருவேப்பிலை வாரமாக இருக்கும்.

    பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஓ... பரவாயில்லையே..இங்கு கருவேப்பிலை கிடையாது. நண்பர்கள் யாராவது வரும் போது கொண்டு வந்து கொஞ்சம்,கொஞ்சமாக பகிர்ந்து தருவார்கள். நாங்கள் வரும் போது ஊரில் காயவைத்து கொண்டு வருவோம். ஆகையால் கிடைத்ததைக் கொண்டு செய்தேன். அதை பகிர்ந்து கொண்டேன்.
      நன்றி.

      Delete