பாமாலை - 15
நறுமண சாம்பிராணி
புகை போட்டேன்
மீண்டும் ஒரு பாடல் என்னுள் இருந்து இயற்றிய கிருஷ்ணா நன்றி. குட்டிக் கிருஷ்ணா நன்றி
ஆர்.உமையாள் காயத்ரி.
படம் FB - நன்றி
கண்ணன்
வரும் பொழுது தெரியாது
களவாட
வெண்ணெய் உறிமீது
விடிகால வேளையில்
செய்து வைத்தேன்
வீதியெல்லாம்
கோலம் போட்டு வைத்தேன்
(கண்ணன்)
நறுமணம் கமழும்
மாலை தொடுத்தேன்
நெய்யில் பலகாரம்
செய்து வைத்தேன்
நெய்தீம் விடிய
ஏற்றி வைத்தேன்
(கண்ணன்)
வந்தானடி அவனும்
சிரித்துக் கொண்டு
வாயெல்லாம்
வெண்ணெய் அப்பிக் கொண்டு
உண்டானடி பலகாரம்
ரசித்துக் கொண்டு
அம்மாவென்று
அழைத்தான் மகிழ்ச்சி கொண்டு
(கண்ணன்)
ஓடி விளயாட
அழைத்தானடி
ஓயாமல் தொடர்ந்தான்
தாவிதாவி
கண்ணாமூச்சி
யாட அடம்பிடித்து
காணாமல் போனான்
மாயக்கண்ணன்
(கண்ணன்)
விழிப்புடன்
இல்லாததால் விடியுமுன்னே
விண்ணுலகம்
சென்றான் வான்வீதியில்
கண்கள் பூக்க
காத்திருந்தேன்
கனவில் அம்மாவென்றழைப்பை
கேட்டிருந்தேன்.
(கண்ணன்)
மீண்டும் ஒரு பாடல் என்னுள் இருந்து இயற்றிய கிருஷ்ணா நன்றி. குட்டிக் கிருஷ்ணா நன்றி
ஆர்.உமையாள் காயத்ரி.
படம் FB - நன்றி
No comments:
Post a Comment