தேவையான பொருட்கள்
கோதுமாவு - தே.அ
உப்பு - தே.அ
தண்ணீர் - தே.அ
எண்ணெய் - 1 தே.க
மாவை பிசைந்து கொண்டு 1/2 மணி நேரம் ஊறவிடுக.(கைகளில் தொட்டுக்கொண்டு பிசைய எண்ணெய் வேண்டும் அவ்வளவே)
பின் சப்பாத்திகளாக இடவும். தோசைக்கல்லில் போட்டு சற்று வேகவும்
திருப்பிப் போடுக. அதே போல் மறுபக்கமும் சற்று லேசாக வேகவும்
எடுத்து அடுப்புத் தீயின் மேல் வையுங்கள். வெந்து உப்பும்.
பின் திருப்பி வைக்கவும். மறுபக்கமும் உப்பி வேகும். பின் எடுத்து தட்டில் வைக்கவும். நெய் (அ) எண்ணெய் தடவி விடவும்.
சப்பாத்தி பூப்போல் இருக்கும். மிக எளிது தான். வேகமாக வெந்து விடும். ஒரே மாதிரி சமமாக தேய்க்க வேண்டும் அவ்வளவு தான்.
வட நாட்டுத் தோழி சொல்லி செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. முன்பெல்லாம் சப்பாத்தி செய்வது என்றால் சற்று கஷ்டமாக இருக்கும். இப்போது இஷ்டமாக இருக்கிறது.
எண்ணேய் இல்லாமல் செய்யப்படும் சப்பாத்தியைத் தான் சுக்கா சப்பாத்தி அல்லது புல்கா ரொட்டி என்பர். மேலே நெய் (அ) எண்ணெய் தடவினால் நமக்கு உருசியாக இருக்கும். தடவாமலும் இருக்கலாம்.
குறிப்பு :
1 ஆழாக்கு மாவுக்கு 1/2 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கும்.
கணக்கா எடுத்துக் கொண்டால் பிசையும் போது எளிதாக இருக்கும். ஏதோ ஒரு நினைவில் அதிகம் ஊற்றமாட்டோம் இல்லையா?
செய்முறை சுலபமாக தெரிகிறதே...
ReplyDeleteஆம். சுலபம் தான்.
Deleteநன்றி.
மிக சுலபமான குறிப்பு.அதிலும் போனஸாக டிப்ஸ். ஆனா என்னிடம் காஸ் அடுப்பு இல்லை.நான்ஸ்டிக் பானில் சுடலாம்தானே. நன்றி.
ReplyDeleteசுடலாம்.
Deleteநன்றி.
காஸ் அடுப்பில் சுடும் போது தீயினால் நன்கு உடனே எழும். அது இல்லாத காரணத்தால் பானில் சுடும் போது கையில் துணியை சிறிது சுருட்டிக் கொண்டு
Deleteசப்பாத்தி எழும் போது அமுக்கி, விட்டு சுற்றி விட வேண்டும்.அவ்வாறு தொடர்ந்து செய்தால் சப்பாத்தி உப்பி எழும்.
ரெம்ப நன்றி உமையாள்.நான் இம்முறையில் செய்துபார்க்கிறேன். எனக்கு உப்பி வராது.அதனால் கேட்டேன். நன்றி.
Deleteசப்பாத்தின்னு சொல்றீங்க, ஆனா பூரி மாதிரி இல்ல தெரியுது.
ReplyDeleteசப்பாத்தி தான். புல்கா ரொட்டி,சுக்கா சப்பாத்தின்னு சொல்லுவோம் இல்லையா..?
Deleteஅதான் இது. பூரி மாதிரி உப்பி வரும்.
நன்றி.
வட நாட்டுக்காரர்களுக்கு சப்பாத்தி கை வந்த கலையாச்சே!!!
ReplyDeleteஆமாம். நமக்கு இட்லி மாதிரி அவர்களுக்கு சப்பாத்தி இல்ல.
Deleteநன்றி
புல்கா ரொட்டி / சுக்கா சப்பாத்தி என்று விளக்கமாக மேலே இப்போது சேர்த்து இருக்கிறேன்.
ReplyDeleteநன்றி
இதே முறையில்தான் நானும் சுடுவேன்.....ஆனா உங்க கையால் செஞ்சு சாப்பிட்ட ரொம்ப ருசி என்று கேள்விபட்டேன்.. அதனால எனக்கு 100 ரொட்டி பார்சல்......ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ReplyDeleteஅனுப்பி விட்டால் போச்சு....
Deleteநன்றி
அருமையான பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
நன்றி ஐயா.
Delete