தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1 பெரிது
தக்காளி - 2
மிளகாய் - 4 அ 5
புளி - சிறு நெல்லி அளவு
உப்பு - தே.அ
கொத்தமல்லி - சிறிது
கருவேப்பிலை -சிறிது
தேங்காய் கீற்று - 5 அ 6
எண்ணெய் - 1 1/2 மே.க
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 1 மே.க
கடுகு - 1/2 தே.க
உ.பருப்பு - 1/4 தே.க
க.பருப்பு 1/2 தே.க
சீரகம் - 1/4 தே.க
பெருங்காயம் - சிறிது
வாணலியில் எண்ணெய் விட்டு முதலில் மிளகாயை வாசம் வருமாறு வறுத்து எடுத்து வைத்துக் கொள்க.
பின் வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் தக்காளி,புளி,சேர்த்துவதக்கவும்.
கடைசியாக உப்பு தேங்காய்,மல்லி,கருவேப்பிலை சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கவும்.
ஆறின பின்பு அரைத்துக் கொள்ளுங்கள்.
தாளிக்கவும்.
ஆர்.உமையாள் காயத்ரி.
வணக்கம்
ReplyDeleteசகோதரி
செய்முறையை பார்த்தவுடன் செய்து சாப்பிட சொல்லுகிறது. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ReplyDeleteசிறந்த விளக்கம்
தொடருங்கள்
இட்லிக்கு ரொம்ப நல்லா இருக்கும் தானே...
ReplyDeleteசெய்து பார்க்கிறோம்... நன்றி...
ReplyDelete