அருமையான இனிப்பு வடை இது. பெரும் பாலான வீடுகளில் தீபாவளிக்கு இதை செட்டி நாட்டுப் பக்கங்களில் கட்டாயமாக செய்வார்கள்.
கல்யாணம், மற்றும் விசேஷமான நாட்களிலும் செய்வார்கள்.
கல்கண்டு கிடைக்கும் இடங்களில் அதை உபயோகப் படுத்துங்கள்.
இல்லை என்றால் சர்க்கரை போட்டுக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்து - 1 கோப்பை
சர்க்கரை (அ) கல்கண்டு - 3/4 கோப்பை
அரிசி மாவு - 3 மே.க
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உளுந்தை 1/2 (அ) 3/4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
உளுந்தை வடிகட்டிக் கொள்ளவும்.
3/4 பாகம் அரைத்த பின் சர்க்கரையை சிறிது,சிறிதாக போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரிசிமாவு சேர்த்து கலந்து கொள்ளவும். பின் வடைகளாகத் தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
மிதமான தீயில் பொரிக்கவும். எண்ணெய் சூடு அதிகமானால் இது இனிப்பாக இருப்பதால் வெளியில் உடனேயே கலர் மாறிவிடும். உள்ளே வேகாமல் போய்விடும்.
மாவை அரைத்த பிறகு நிறைய நேரம் வைத்து இருக்கக் கூடாது.
உளுந்தை அரைக்கும் போது தண்ணீர் நிறைய சேர்க்க கூடாது. தண்ணீரை தெளித்து தெளித்துத் தான் அரைக்க வேண்டும். சர்க்கரை(அ) கல்கண்டு சேர்க்கும் போது மாவு இளகி வரும்.
செட்டி நாட்டு கல்கண்டு வடை ரெடி...!!!
ஆர்.உமையாள் காயத்ரி.

வணக்கம்
ReplyDeleteஎளிய செய்முறை விளக்கம்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் மனைவி இதை செய்து பார்க்க வேண்டும் என்று சொல்லி கொண்டு இருந்தார்கள். இந்த பதிவை காண்பித்து உடனே செய்யச் சொல்கிறேன்
ReplyDeleteஓ... அப்படியா.... செய்யச் சொல்லுங்கள். நன்றி.
Deleteநாவில் நீர் ஊறுகிறது! ஒரு ரெண்டு வடை பார்சல் அனுப்புங்கள்! ஹாஹா! நன்றி!
ReplyDeleteஅனுப்பி விட்டால் போச்சு...! நன்றி.
ReplyDeleteகல்கண்டு வடை கேள்விப்பட்டதே இல்லை. வித்தியாசமான குறிப்பு. பார்க்க நன்றாக இருக்கு. நன்றி.
ReplyDelete