இட்லி...
என்னடா..... இது... இட்லியைபற்றி எல்லாம் போட்டு
இருக்காங்களே....அப்படின்னு நினைக்கிறீங்க....! இல்ல... ஏன் நான் இட்லியை
பற்றி கவிதையே போட்டு இருக்கேன்.
http://umayalgayathri.blogspot.com/2013/11/blog-post_13.html - இட்லி கவிதை
இட்லி மிகவும் அருமையான ஒன்று. சும்மா மல்லிப்பூ மாதிரி இட்லி தினமும்
கிடைக்கும் போது அதன் அருமை தெரியாது. எங்கே அது அரிதாகிப்
போகிறதோ அப்போதான் ...வெய்யிலின் அருமை நிழலில்.
இட்லி மாவை ஆட்டும் விதத்தில் தான் அதன் பஞ்சுத் தன்மையே...இருக்கு.
தெரிந்தவர்களுக்கு இல்லை இப்பதிவு.
தெரியாதவர்களுக்கு ok வா...?
1. அரிசியை சுத்தம் செய்து குறைந்தது 4 மணி நேரம் ஊற விட வேண்டும்.
2 .உளுந்தை 2 தடவைக்கு மேல் நீரில் கழுவாமல் ஊற வைக்க வேண்டும்.
சிலர் நல்லா வெள்ளையா ( நாம தான் அப்படி வெள்ளையா இல்லை சரி...
ஐய்யோ சாமி நான் என்னை தான் சொன்னேன் நீங்க தப்பா
எடுத்துக்காதீங்க...ஹி..ஹீ...நீங்க எல்லாம் புரிந்துட்டு இருப்பீங்க )
இட்லியாவது வெள்ளையா இருக்கட்டும் அப்படின்னு கழுவுவாங்க. ஏன்...
கழுவக்கூடாது....? Good Question... ஏன்னா... மாவு எல்லாம் போச்சுன்னா
சும்மா...உளுந்த மாவு ஆட்டும் போது பொங்கி வருவது குறைச்சலாக
இருக்கும். அப்படின்னா இட்லியின் மிருதுத் தன்மை குறையும் இல்ல...
3. முதலில் உளுந்தை தான் ஆட்ட வேண்டு. ஏன். உங்க மைண்டு வாய்ஸ்
கேட்டுட்டேன்...அரிசியை ஆட்டின பின் உளுந்தை ஆட்டினால் உளுந்து
அவ்வளவா பொங்காது. so...
4. முதல் நாள் சாயங்காலமே மாவை ஆட்டி உப்பு போட்டு கரைத்து வைக்க
வேண்டும். அந்த மாவு பாத்திரத்தை இடமாற்றிக் கொள்ளாமல் ஒரே
இடமாக வைக்கவும். இல்லை என்றால் புளிப்பது நேரமாகும். ஆனா வெயில்
காலத்துல சும்மா ரோஷமா புளித்து தள்ளி விடும்.
உளுந்தை ஆட்டும் போது நல்லா தள்ளி விட்டு ,தண்ணீர் தெளித்து ஆட்ட
வேண்டும். அப்போது நல்லா மாவு பொங்கி வரும். மாவு கனிசமாக இருக்கும்.
சில உளுந்து நன்கு பொங்கிவரும். சில உளுந்து அளவா பொங்கும்.{ அது
நம்மள ( என்னை) மாதிரி போலா .... அவ்வளவா பொங்கி பதிவு போடாது ம்...}
இப்படிப் பட்ட உளுந்து உங்க கைவசம் மாட்டும் போது அரிசி 7 அ 6 பங்கும் /
உளுந்து 1 பங்காக போட்டு ஆட்டவும். ஷாக் ஆகிட்டீங்க போல.....!!!
கவனிக்க.... ஆட்டும் விதம் முக்கியம். ஒருதடவை பரிசோதனை செய்து
வெல்க.
அப்புட்டுத்தான் விஷயமுங்க...
தேவையான பொருட்கள்
அரிசி - 4 பங்கு
உளுந்து - 1 பங்கு
உப்பு - தே.அ
இட்லி தட்டில் எண்ணெய் தடவி
மாவை ஊற்றவும். வேகவிடவும்.
வெந்த இட்லி இதோ.... சற்று
ஆறவும் ஸ்பூனால் எடுக்கவும்.
தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.......!!!!
மல்லிப்பூ இட்லி...
மணக்க தக்காளிச் சட்னி...
விண்டு வாயில் வைக்க...
வீட்டில் உள்ளோர் தன்னை மறந்து போவர்...!!!

என்ன இது இப்படி சொல்லிப்புட்டீக ....முதலுக்கே மோசமாச்சே....!
அப்படி இருக்கும்னு சொல்ல வந்தேன்...ஹி...ஹி...நான் வரேன்டா சாமி..இல்லைனா...!!!
ஜீ.......ட்........!!!
நல்ல சுவையான இட்லியாகத் தெரிகிறது.5க்கு ஒரு பங்கு முழு உளூந்து போட்டு அரைத்தாலும் நன்றாக வருகிறதுமா. சுவாரஸ்யமான பதிவு.
ReplyDeleteவணக்கம்
Deleteஆம்
தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
ReplyDeleteவணக்கம்!
மொட்டு மலா்மென்மை! தொட்டுக் களிப்புற்றே
இட்டிலியை உண்டேன் இரண்டு
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம்
Deleteதங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி ஐயா.
வணக்கம்
ReplyDeleteசகோதரி
புலர்ந்த காலைப்பொழுதில் தங்களின் பதிவுதான் முதலில் படித்தது.. அதுவும் இட்லி பற்றியது.. பார்த்தவுடன் பசி எடுத்தது நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
Deleteதங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி
சிறந்த பகிர்வு
ReplyDeleteவணக்கம்
Deleteதங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி
கவிதைக்குள் போய்வந்தேன் அருமையாகவும், நகைச்சுவையாகவும் இருந்தது
ReplyDeleteபோட்டோ அருமை சகோதரி.
வணக்கம்
Deleteஓ ..கவிதை படித்தீர்களா...
தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி
பரிசோதனை செய்து பார்க்கலாமா...? ஹிஹி...
ReplyDeleteவணக்கம்
Deleteஆமாங்க....நாங்க சமையல் கட்டில் அதானே செய்கிறோம்....
தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி
இட்லி டிப்ஸ்களுக்கு நன்றி!
ReplyDeleteவணக்கம்
Deleteதங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி
இட்லியில இவ்வளவு விஷயங்களா இருக்குது!!!!
ReplyDeleteவணக்கம்
Deleteதங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி
சகோதரியிடம் கேளுங்கள்...சொக்கன்.
Deleteஇட்டிலிக்கு இட்டீரே ஏற்றதொரு சட்டினி!
ReplyDeleteதட்டிலே மீதமுண்டோ தா!
சகோதரி!.. நான் இங்கு வருவதற்குத் தாமதமாகிவிட்டது.
கவிஞரையாவும் சப்பிட்டுவிட்டாரே...
எனக்கும் ஏதும் மீதமுண்டோ மல்லிகைப்பூ இட்டிலி?..:)
வாழ்த்துக்கள் சகோதரி!
வணக்கம்
Deleteதங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி. தங்களுக்கு இல்லாமலா...!!!