Sunday, 6 July 2014

கிள்ளு மிளகாய் வெங்காயத் திரக்கல்

இட்லி , தோசைக்கு தொட்டுக் கொள்ள ஏற்ற ஒரு சட்னி இது.











தேவையான பொருட்கள்

வெங்காயம் - 1 கோப்பை
புளி - எலுமிச்சை அளவு
இட்லி மாவு - 1 மே.க
உப்பு - தே.அ



தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 2 1/2 மே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
சீரகம் - 1/4 தே.க
வரமிளகாய் - 4 (அ) 5
                                            தாளிக்கவும்
                                                    






வெங்காயம் சேர்த்து வதக்கவும்






புளிக்கரைசல் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். வெங்காயம் வெந்து, புளியின் பச்சை வாசம் போன பின்









இட்லி மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். ஒரு கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.
                             





                                 கிள்ளு மிளகாய் வெங்காயத் திரக்கல் இதோ....!!!

மிளகாயின் மணத்துடன், வெங்காயம் வதங்கிய வாசனையுமாக சட்னி புது சுவையாக இருக்கும்.

மிக எளிதாக செய்யலாம்.

சில சமயம் தக்காளி இல்லாமல் எவ்வாறு சட்னி செய்வது...? என்கிற டென்ஷன் இன்றி,  இவ்வாறு செய்யலாம்.

                                     செய்வது சுலபம்....சுவையோ அபாரம்....!!!





ஆர்.உமையாள் காயத்ரி

13 comments:

  1. அஹா ..இவ்வளவு குட்டிக் குட்டி வேலையோடு சுவையான சமையல்
    செய்யக் கற்றுக் கொண்டால் எவ்வளவு நல்லா இருக்கும் (காட்டுப்
    பூனை வீட்டு வேலை செய்யப் பஞ்சிப் படுறதப் பாரு எனக்கு நானே
    சொல்லிக் கொண்டது :))))))))))) ) அருமையான தகவல் தோழி இன்னும்
    இன்னும் இது போன்ற சுவை மிகுந்த பகிர்வுகளைத் தாருங்கள் வீட்டுக்கு
    வருகின்ற விருந்தாளிகளை இதை வைத்தே அசத்திடலாம் :)) மிக்க நன்றி
    தோழி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்பாளடியாள். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழி..

      Delete
  2. வணக்கம்
    சகோதரி

    மிக அருமையான செய்முறை விளக்கம் செய்து பார்க்கிறேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன். செய்து ருசியுங்கள். நன்றி சகோதரரே.

      Delete
  3. சுவையான சைட் டிஷ் ஆக இருக்கிறது! செய்து பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சுரேஷ். செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். நன்றி.

      Delete
  4. நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் எளிதாக (எனக்கு தோன்றுகிறது!!!) இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் செய்யப்போகிறவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கிறேன்!!!!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சொக்கன். செய்யப் போகிறவர் என்ன..? சொன்னார் என்று சொல்லுங்கள். நன்றி.

      Delete
  5. வித்தியாசமான ரெசிப்பி. ஈசி.செய்து பார்க்கிறேன் .நன்றி.

    ReplyDelete
  6. தங்கள் இல்லத்தின் விருப்பமான தோசைக்கு நன்றாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  7. ம்ம்ம்.. எனக்கு இல்ல.. எனக்கு இல்ல... சொக்கா... எனக்கு இல்ல...

    ReplyDelete
  8. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  9. பார்த்த உடனே செய்து சாப்பிட தோணுதே ... நன்றி

    ReplyDelete