அவன் தாள்
கிருபாகரோ கிருபாகரோ
தயாகரோ கிருபாகரோ (கிருபாகரோ)
உன்கமல பாதம் கைபட
உன்கமல தீட்சை வேண்டுமே
பத்துவிரல் கை நீவிட
பாதசேவை யருள் வேண்டுமே (கிருபாகரோ)
உலகம் அளந்த பாதமே
உன்பக்தர்க் கோடும் பாதமே
அன்னைமடி கிடக்கும் பாதம்
அன்னைக்கு ஓய்வு வேண்டுமே (கிருபாகரோ)
என்செய்தேன் நான் என் செய்தேன்
இவ்வுலகில் தோன்றி என் செய்தேன்
தகப்பனின் கால் பிடிக்கவே
தயாகரோ கிருபாகரோ (கிருபாகரோ)
தயாளுமூர்த்தியின் கனிந்தமனம்
தயவுசெய்ய வேண்டுமே
உமையுடல் திரியின் ஜோதி
உன்பாத சேர்க்கை யடையவே (கிருபாகரோ)
பாதம் நினைவதை உருவாக்கி
பக்திதழும்ப பாடலேற்றிய - நீ
பாராட்டை மட்டும் விட்டுவிட்டாயே
அப்பா... எனக்கு...!!! - உன்
பாதமல்லவா வேண்டும் எனக்கு.
ஆர்.உமையாள் காயத்ரி.
படம் - கூகுள் நன்றி.
வணக்கம்
ReplyDeleteபாமாலையை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும், வாசித்து ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி.
Deleteஅருமை சகோதரி!
ReplyDeleteஅரவிந்தன் அருளுவான் நிச்சயம்!
உண்மைதான் சகோதரி...
பக்தியோடு அருள் வேண்டிடல் மட்டுமே அவன் விரும்புவது..
பாராட்டு விரும்புவது நாமன்றோ!..
வாழ்த்துக்கள்! தொடருங்கள் சகோதரி!
//பக்தியோடு அருள் வேண்டிடல் மட்டுமே அவன் விரும்புவது..
Deleteபாராட்டு விரும்புவது நாமன்றோ!..//
ஆம்.சகோதரி. நன்றி.
பாமாலையை, பூமாலையுடன் மழையாய் பொழிந்துள்ளீர்கள் சகோதரி வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடர்ந்து கருத்திடுவதற்கு நன்றி சகோதரரே..
Deleteநல்லதொரு பாமாலை. ஒருமுறைக்கு இரு முறை படித்து ரசித்தேன்.
ReplyDeleteஇரு முறை ரசித்து படித்து மகிழ்ந்து கருத்திட்டமைக்கு நன்றி.
Deleteமிக அழகாக பாமாலையை பார்த்தசாரதிக்கு சூட்டி,அழகு பார்த்திருக்கிறீங்க. நிச்சயம் அருளுவான் அந்த பரந்தாமன். முதல் வரி "கிருபாகரோ கிருபாகரோ" ரெம்ப பிடிச்சிருச்சு.அதனால் இருமுறை படித்துவிட்டுதான் கருத்திட்டேன். அழகான படமும்.நன்றி.
ReplyDeleteஇரு முறை ரசித்து படித்து மகிழ்ந்து கருத்திட்டமைக்கு நன்றி பிரியசகி.
ReplyDelete