கட்டடக்கலையை தான் எப்படி இப்படி கட்டினார்கள் என ஆராய்ச்சி செய்கிர்கள்.
சகார் பிரமிடு நுழைவு வாயில்
கீஸா பிரமிடு
கீஸா பிரமிடு நுழைவு வாயில்
டிக்கட் வாங்குமிடம்
கீஸா பிரமிடு உள்ளே போகும் இடம்
ராஜாக்களுக்கு பெரிய பிரமிடு. உள்ளே போகிற வழி மிக குறுகலாக ஏணிப்படி போல போகும். நிமிர்ந்து செல்ல முடியாது. குனிந்து ஒர் ஆள் போகும் அளவாக இருக்கும். ஒருவர் பின் ஒருவராக போக வேண்டும்.
சற்று மேலே போன பின் தான் நிமிர முடியும். பின் மறுபடியும் ஏணிப்படி போல போகும். இதில் நிமிர்ந்து நடக்கலாம். காற்று சற்று குறைவாக தான் இருக்கும்.
நாங்கள் டிசம்பர் மாதம் நல்ல குளிரில் போன போது கூட உள்ளே வேர்த்து விரு விருத்து போய்விட்டது. அப்பாடா சாமி எப்போடா வெளியே வரலாம் என்றாகி விட்டது. வெளியில் எவ்வளவு குளிர் என்றாலும் உள்ளே தெரியவில்லை.
மேலே போனால் ஒரு அறை உண்டு. அங்கு தான் மம்மீஸை வைத்து இருப்பார்களாம். இப்போது மியூஸியத்தில் வைத்து இருக்கிறார்கள். இங்கு வருபவர்கள் தியானம் செய்கிறார்கள். இது பிரமிடின் மத்தியப் பகுதில் உள்ளது.
ஏறுபவர்கள் ஏறின பின் தான் மற்றவர்கள் இறங்க முடியும். மூச்சு திணரல் இருப்பவர்கள் உள்ளே போகாமல் இருப்பது நலம்.
இது ராணிகள் பிரமிடு. இது சிறியதாக இருக்கும். இதில் போக இலவசம். இப்படத்தில் மேல் இருந்து கீழே இறங்கி பிரமிடுக்குள் வருகிற வழி. உள்ளே முதலில் நன்கு குனிந்து மட்டுமே வர முடியும். பின் தான் அப்பாடா நிமிர்ந்து நிற்கலாம்.
ஆனால் எப்படித்தான் கட்டினார்களோ....!
அதன் பின் மறுபடியும் குனிந்து இறங்கி வந்தால் அறை இருக்கும்.
ஒவ்வொருவராக வர போகத்தான் இடம் இருக்கும்.
ஸ்பிங்ஸ்
ஸ்பிங்ஸ் கீழே
ஆர்.உமையாள் காயத்ரி.
அருமையான படங்கள்.... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபடங்கள் அருமை சகோதரி நானும் பார்க்க ஆசைப்படும் இடம், எஜிப்த்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
அதிசங்களை பகிர்ந்து எங்களையும் அசத்தி விட்டீங்கள் தேடலுக்கு எனது பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
Deleteநானும் தங்களின் புண்ணியத்தால்,பிரமிட் கண்டு களித்தேன். பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஅருமையான படங்களுடன் கூடிய பதிவு.
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திருமதி R.Umayal Gayathri
தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
Delete