தேவையான பொருட்கள்
மாம்பழம் - 1 கோப்பை
சர்க்கரை - 1 கோப்பை
கான்பிளவர் மாவு - 1/2 கோப்பை
முந்திரி - 13
நெய் - 5 மே.க
பாதி நெய்விட்டு மாம்பழத்துண்டுகளைப்போடவும்.
மாம்பழம் வெந்து குழைந்து வரும்.
கான்பிளவர் மாவை கரைத்து விடவும்.
விடாமல் கிளற கட்டியில்லாமல் வரும்.
சர்க்கரை சேர்க்கவும்
முந்திரியும், மீதி நெய்யையும் போட்டு கிண்டவும்.
நன்கு வெந்து அல்வா பதம் வரவும் இறக்கவும்.
தட்டில் நெய்தடவி துண்டுகளாகவும் போடலாம் இலையெனில் அப்படியே எடுத்துக் கொள்ளலாம்.
செய்வது மிக எளிது. இப்போ..... சீஸன் இல்லையா...செய்து பாருங்கள்.
ஃபுட் கலர் மஞ்சள் இருந்தால் போட்டுக் கொள்ளலாம். இன்னும் கலர் பார்க்க அழகாக இருக்கும்.
ஆர்.உமையாள் காயத்ரி.
மாம்பழத்துல ஹல்வா வா ? பெயரே, புதுமையாக இருக்கிறதே...
ReplyDeleteசுவையும் புதிதாக இருக்கும்.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
மாம்பழ அல்வா பார்க்க நன்றாகவும்,செய்முறை ஈஸியாவும் இருக்கு. மாம்பழமும் இருக்கு.செய்யவேணும். அங்கு ஸ்வீட் அதிகமா சாப்பிடுவாங்களோ. ஸ்நாக்ஸ் அதிகம் ஸ்வீட்தான். நன்றி
ReplyDeleteஆம். அதுவும் ரம்ஜான் அப்போ நிறைய ஸ்வீட் சாப்பிடுவாங்க. வித விதமாக கிடைக்கும். செய்து பாருங்கள். நன்றி
Deleteபார்க்கப் பரவசம் பாடாய் படுத்துதே!
ReplyDeleteயார்க்குக் கொடுப்பீர் இதை?
அருமை சகோதரி! மிக இலகுதான்!
வாழ்த்துக்கள்!
இங்கு நண்பர்களுக்குத் தான்.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
வித்தியாசமாத்தான் இருக்கு! செய்து பார்ப்போம்! நன்றி!
ReplyDeleteசெய்து பாருங்கள். குழந்தைகள் விரும்புவார்கள்.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
மாம்பழ அல்வா,நாக்கில் எச்சில் ஊறுகிறது.
ReplyDeleteசகோதரியை செய்து தரச் சொல்லுங்கள்.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
ReplyDelete