Wednesday, 23 July 2014

ஆராரோ...ஆரிரரோ...!!!

கவிதை - 27



















வற்றல் மிளகாயை
வாயில் வைத்தாயோ...?
வாயில் வைத்ததினால்
ஒற்றை விரலையும்
உள்ளே வைத்தாயோ...!!!


சுவையறியும் வேளையிலே
காரமுள் குத்திற்றோ...!
கண்ணே...!
கண்டதை எடுத்து வாயில்
கண்நிமிட்டும் நொடில் வைத்தாயடா...

அழுத கண்துடைக்கிறேன்
ஆராரோ....பாடுகிறேன்...
அம்புலிமாமா..பாரங்கே...!!!
 அமுதம் உண்ணலாம் 
அழகாய் வா இங்கே.



R.Umayal Gayathri.

5 comments:

  1. அமுதம் உண்ணலாம் வா எனச்சொல்லிவிட்டு... காரமிளகாயை கண்ணில் காண்பிப்பது நியாயமா ? சகோதரி

    ReplyDelete
  2. ஆரம்பமே அட்டகாசம் சகோதரி. அதற்கேற்ற படங்களும் அருமை.

    மிளகாயை வாயில் வைத்ததால் ஏற்பட்ட காரத்திற்கு அழும் குழந்தையின் படம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது

    ReplyDelete
  3. முதல் படத்திற்கேற்ப அழகாக கவிதை...

    ரசித்தேன்...

    ReplyDelete
  4. வணக்கம்
    சகோதரி
    தாலாட்டை இரசித்தேன்.. நன்றாக உள்ளது. பகிர்வுக்குநன்றி

    -நன்றி-
    அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. பாப்பாடி அமுதூட்ட அழைப்பு
    நன்றாக அமைந்த கவிதை

    ReplyDelete