பாடல் - 16
நீலகண்ணனா இல்லை நீ நீலவண்ணனா
குண்டுகண்ணனா இல்லை குசும்பு மன்னனா
புல்லாங்குழல் இசை கேட்கவேண்டும்
புவியைமறந்து நான் ரசிக்கவேண்டும்
தோழியாக உன்னோடு ஆடவேண்டும் - நல்
தோழமையோடு உன்தோள் சாயவேண்டும் நீலகண்ணணா
ஊள்ளமது உறங்கிட நீவேண்டும்
உயிர்பிரிய உன்முகம் தெரியவேண்டும்
நாமஸ்மரணை நித்தம் நவிலவே - நல்
ஹிருதய யாகத்தீ எறிய வேண்டும் நீலகண்ணணா
பக்திபுஷ்ப மணமாலையாக உன்
நீலகண்டம்தழுவி கிடக்க வேண்டும்
நந்தவனமாய் பரந்துகிடக்கவே - நல்
நந்தகோபன் பாதம்பட்டு சமையவேண்டும் நீலகண்ணணா
மீண்டும் ஒரு அருமையான கிருஷ்ண கானம்.
ReplyDelete"//உயிர்பிரிய உன்முகம் தெரியவேண்டும்//" - இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்குமா...
"//உயிர்பிரிய உன்முகம் தெரியவேண்டும்//" - இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்குமா...
Deleteகிடைக்குமா...? என்பது நமக்கு தெரியாது.
கிருஷ்ணனுக்கு மட்டுமே வெளிச்சம்
நம் கருமங்கள் என்ன சொல்கின்றனவோ?
நாராயணனுக்கு மட்டுமே வெளிச்சம்.
எல்லாம் அவன் செயல்.
நன்றி.
கிருஷ்ண கானம், அமுதமழைபோல் பொழிகிறது வாழ்த்துக்கள்.
Deleteநன்றி கில்லர்ஜி.
Delete
ReplyDeleteவணக்கம்!
வண்ணத் தமிழில் வடித்த கவிகாட்டும்
கண்ணன் அழகினைக் கண்டு!
வணக்கம் சகோதரி!
ReplyDeleteநாடியோர்க்கு நல்குவான் நந்தகோபன் இன்னருள்
தேடியே தாள்பணிந் தேற்று!
அருமையான கிருஷ்ண கானம்!
வாழ்த்துக்கள்!
கண்ணன் வந்துள்ளத்தே கானம் இசைத்து
Deleteகாணாமல் மாயன் மறைகிறான்
நன்றி சகோதரி.
தமிழ் மணம் 2
ReplyDeleteநன்றி சகோதரி.
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
அழகு தமிழில் அழகிய பாடல் கண்டு மகிழ்ந்தேன்
ஒவ்வொரு வரிகளையும் இரசித்துப்படித்தேன். பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-