கோட்டை அம்மன்
தேவகோட்டை மாநகரில் கோட்டை அம்மன் கோவில் ஆடித்திருவிழா வருடா வருடம் விமரிசையாக நடை பெறும்.
இந்த ஆண்டு 21.7.14 லில் இருந்து - 4.8.14 வரை நடை பெற்றது. அம்மனுக்கு காப்பு கட்டும் அன்று ஊரின் எல்லைக்குள் இருப்பவர்கள் திருவிழா முடியும் வரை எல்லைதாண்டக் கூடாது என்பது ஐதீகம். ஆகையால் காப்பு கட்டும் போது வெளியூர் போக வேண்டியவர்கள் அச்சமயம் பக்கத்து ஊரான காரைக்குடிக்கு சென்று வருவார்கள்.
இது ஊருக்குள் அமைந்த கோவில். நாட்டுக் கோட்டை செட்டியார்களின் பராமரிப்பில் உள்ளது.
ஊரின் வெளியே அம்மனின் பழங்கால கோவில் இருக்கிறது. இது ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்து இருக்கிறது. தேவகோட்டையின் காவல் தெய்வம் இந்த அம்மன் தான். சக்தி மிக்க அம்மன்.
இந்த திருவிழாவின் போது தான் அம்மன் ஊருக்குள் பிரவேசித்து 15 நாட்கள் தங்கி இருப்பார்கள்.
கர்ப்பகிருகத்தில் மேடை மட்டுமே எப்போதும் இருக்கும். இச்சமயம் தான் ஆற்றில் இருந்து குடத்தில் நீர் எடுத்து, ஆற்றங்கரைக் கோவிலில் கொண்டு வைத்து தென்னம் பாளையை அதில் வைத்து அம்மனை ஆவாகனம் செய்து இங்கு கொண்டு வந்து வைப்பார்கள்.
அதில் தான் அம்மனின் அலங்காரத்தை நீங்கள் காண்கிறீர்கள்.
அம்மனுக்கு நேரில் வெளியில் அமைந்திருக்கும் மோடைக்கு (மேடை) பால் அபிஷேகம் நடை பெறுகிறது.
ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு அலங்காரம். நினைத்ததை முடித்துக் கொடுக்கும் அம்மன் இவள். இங்கு வீடு,விமானம், கால்,கை,கண்மலர்,உடம்பு,பாம்பு, என நிறைய விதமான பொருட்கள் அர்ச்சனை டிக்கட் கொடுக்கும் இடத்தில் கிடைக்கும். இதற்கு பணம் கட்டி வாங்க, ஒரு தட்டில் வைத்து கொடுப்பார்கள்( இது விலைக்கு அல்ல) அதை பெற்றுக் கொண்டு போய் அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்யும் போது இதை அவர் சாமியிடம் வைத்து பூசை பண்ணிக் கொடுப்பார்கள். நம் வேண்டுதலுக்கு ஏற்ற பொருட்களை மட்டும் வைத்து வழி பட அடுத்த ஆண்டுக்குள் அது கண்டிப்பாக நிறைவடையும்.
மீண்டும் அப்பொருளை திருப்பி வாங்கிய இடத்தில் கொடுத்து விட வேண்டும்.
அம்மனுக்கு பொங்கல் வைக்கிறார்கள்.
காய்கறி அலங்காரத்தில் அம்மன்.
அம்மன் மீனாட்சி அலங்காரத்தில்
வேறு மதத்தினரும் இந்த அம்மனை நாடி வருகிறார்கள். ஊரின் காவல் தெய்வம் என்பதலும், அவர்களின் விருப்பம் நிறை வேறுகிறது என்பதாலும், அம்மனின் சக்தியை உணர்ந்ததாலும் ஒற்றுமையாக ஊர் மக்கள் வழிபடுகிறார்கள்.
இங்கு வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் பேஸ்புக் - நகரத்தார் பதிவில் இருந்து பெற்றவை. அவர்களுக்கு என் நன்றி.
படங்கள் : திரு . சுப்பிரமணியன் வீரப்பன். — in Devakottai, India.
மிகவும் அருமையான படங்களுடனான பகிர்வு. பாராட்டுக்கள். நன்றிகள்.
ReplyDeleteஅருமையான படங்கள் சிறப்பான தகவல்கள்.பாராட்டுக்கள்.!
Deleteநன்றி அம்மா.
Deleteஆஹா,,, இப்பத்தானே தெரியுது ? நீங்க நம்ம ஊருனு... முந்திட்டீங்களே,,,, மறந்திட்டேனே... பதிவைப்போட....
ReplyDeleteஊரு ஞாபகம் இருக்கணுமில்ல...
Deleteகில்லர்கீஜீ, பெயருல மட்டும் ஊர் பெயரை வச்சிருந்தா பத்தாது, நியாபகம் வச்சு எங்களுக்குக்காக பதிவும் போடணுமாக்கும்.
Deleteசொல்லிட்டீங்கள்ல.... கொப்புடையம்மன் கோவில் திருவிழா வரட்டும் தூக்கிடுறேன்... காரைக்குடியை.
Deleteஆ!! அஸ்கு, புஸ்கு.
Deleteநான் பேர்ல ஊர்பெயரையும் சேர்த்து வச்சிருக்கவங்களைத்தான் சொன்னேன்.
வணக்கம்
ReplyDeleteஊர் நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய விதம் நன்றாக உள்ளது நாங்களும் அறிந்தோம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எங்கள் ஊரைப் பற்றியும்,எல்லை அம்மனைப் பற்றியும் எல்லோரும் அறிய வேண்டும் என பதிவிட்டேன்.
Deleteகோட்டை அம்மன் கோவில் திருவிழா பகிர்வு சிறப்பு! படங்கள் வெகு அழகு! நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுரேஷ் அவர்களே.
Deleteகண்களில் ஒற்றிக்கொள்ள வைக்கின்ற அருமையான அழகான படங்கள்!
ReplyDeleteஊரின் காவற் தெய்வம் என்னும்போது அவளின் அருளுக்கு நிகரேது.!
நல்ல விளக்கமான பதிவும் பகிர்வும் சகோதரி!
வாழ்த்துக்கள்!
பொதுவாக காவல் தெய்வத்திற்கென்று எல்லா ஊர்களிலும் ஒரு முக்கியத்துவம் உண்டு. அவளின் அருளுக்கு நிகரே இல்லை தான்.
Deleteமுகநூலில் புகைப்படங்களைப் பார்த்த பின் இதை எழுத வேண்டும் என தூண்டுதல் ஏற்பட்டது.
இளமதி அவர்களுக்கு...
Deleteஎங்க ஊருல, அப்படித்தானே அழகாக இருக்கும் எங்களைப்போல.
திருவிழாவில் கலந்து கொண்டு உங்களுக்க்கு மட்டும் வேண்டிக் கொண்டீர்களா அல்லது எங்களுக்கும் சேர்த்து வேண்டிக் கொண்டீர்களா?
ReplyDeleteதிருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் அவா. அது இயலாத காரணத்தால்.... மனத்திற்குள் உலக மக்கள் அனைவரின் நலத்திற்காகவும் பிரார்த்திற்கிறேன்.
Deleteஅருமையான பகிர்வு. நன்றி அம்மா.
ReplyDeleteதெரியாத கோவில். இப்போது தெரிந்து கொண்டோம்.தரிசித்தோம். நன்றி.
ReplyDeleteநன்றி.
Deleteஅம்மனின் ஆடித் திருவிழா நிகழ்ச்சிகள். தங்கள் பகிவுக்கு நன்றி!
ReplyDeleteத.ம.4
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி ஐயா.
Deleteதங்களின் புண்ணியத்தில், நானும் அம்மனை தரிசித்துவிட்டேன்.
ReplyDeleteபகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி
ReplyDeleteஆடித் திருவுலா பற்றிய
ReplyDeleteசிறந்த கருத்துப் பதிவு
தொடருங்கள்
Nice photos. And explanations. But some mistakes in tamil. Pl . check that also. ...thanks.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி. இப்போது சரி செய்து விட்டேன்.
ReplyDeleteஅம்மனின் ஆடித் திருவிழா புகைபடங்கள் அழகு!
ReplyDelete