தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 3/4 கோப்பை
உப்பு - தே.அ
நெய் - 1 தே.க
உளுந்து 1/2 கோப்பை
மிளகாய் - 4
சோம்பு - 1/4 தே.க
எண்ணெய் - 2 மே.க
கடுகு - 1/4 தே.க
பெருங்காயம்
உளுந்தை 1/2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
மிளகாய் ,சோம்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்
எண்ணெய் விட்டு தாளிக்கவும்.
அரைத்ததைப் போட்டு,உப்பு சேர்த்து கிளரவும்.
ஈரப்பதம் போய் நன்கு வெந்த பின் இறக்கவும்.பூரணம் தயார்.
1 டம்ளர் தண்ணீரில் உப்பு,நெய் விட்டு நன்கு கொதிக்கும் போது மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளரவும்.
15 நிமிடங்கள் மூடி வைக்கவும்
சோமாஸ் மாதிரியும் செய்யலாம்.
இல்லை என்றால் உருண்டயாக கொழுக்கட்டை செய்து கொண்டு இட்லி பாத்திரத்தில் அவிக்கவும்.
கார பூரணக் கொழுக்கட்டை தயார்...!!!
விநாயகர் சதுர்த்திக்கு நேற்று செய்ததை இன்றா கொடுப்பது ?
ReplyDeleteநேரமின்மை தான் காரணம்..
Deleteஅருமையாக இருக்கும் போல தோன்றுகிறதே..:)
ReplyDeleteஆமா... 1/2 மணி நேரம் உழுத்தப் பருப்பு ஊறினா போதுமா:0
காரம் என்பதால் செய்து பார்க்க ஆவல்!..
1/2 மணி நேரத்திலேயே உளுந்து ஊறிவிடும். ( அதிக குளிர் என்றால்.... கூடுதல் நேரம் ஆகும். )
Deleteசெய்து பாருங்கள். அருமையாக இருக்கும்.
இதுவரை இனிப்பு பூரணக்கொழுக்கட்டைதான் சாப்பிட்டு இருக்கேன். கார பூரணக்கொழுக்கட்டை ம்ம்ம்ம்.... டேஸ்டியா இருக்கும்போல இருக்கே..!
ReplyDeleteஆம். நன்றி .
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி...
ஆகா..... ஆகா.... பார்த்தவுடன் சாப்பிடச் சொல்லுது.... அருமையான செய்முறை விளக்கம் கடையில் விற்பனை செய்வர்கள் என்றால் வாங்கிச் சாப்பிடலாம்..... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கடைகளில்...தெரியவில்லை....
Deleteநன்றி.
ஆகா கொழுக்கட்டை பார்த்தும் உண்டும் பலவருடங்கள் ஆச்சு !
ReplyDeleteசெய்முறை காட்டியே செய்தகொழுக் கட்டையுண்டு
நெய்யாய் மணந்தது நெஞ்சு !
இன்றுதான் வந்தேன் இயல்பான பதிவுகண்டேன்
இனி அடிக்கடி வருவேன் சாப்பாட்டுக்காய்
வாழ்க வளமுடன்
வாங்க, சீராளரே வாங்க ஆனால் ? பசி அடங்காது பசியை கிளப்பி விடும் உண்மை.
Deleteசென்ற வாரம் இனிப்பு பூரண கொழுக்கட்டையை சாப்பிட்டு பார்த்தாச்சு. இனி, இந்த கார பூரண கொழுக்கட்டையை செய்யச்சொல்லி சாப்பிட்டு பார்க்க வேண்டியது தான்.
ReplyDeleteஆம்..
Deleteஇந்த வாரத்திற்கு டிபன் முடிவு பண்ணீயாச்சா..?
நல்லது. சகோ.
காரம் - கார கொழுக்கட்டை நமக்கு ஆகாதுங்களே.......
ReplyDelete