காட்டில் -
காலடி
கதி கலங்கிற்று ...!!!
எனக்கு
என் அடி...
நிழல் சல்லடையில் - விழுந்த
ஒளி வட்டங்கள்...!!!
ஆங்காங்கே அலைந்தன...
காற்றின் கைபரவலில்
சலிந்தன ஒளிபரவல்கள்...
சப்தங்கள் சங்கமித்து
சங்கீதம்...மிதந்து...
புது வடிவில் ஒலிக்க...
புது வடிவில்
சிம்பொனி... இசை உருவாகின...!!!
ரசித்த எனக்கோ...
சிங்கம் வருமோ..? - என
தனி வழி செல்லும்...
எனக்கு பயம் தான் கூட வந்தது...!!!?
மிதமான குளிர் - ஆனாலும்
மிகுந்தன வியர்வைத்துளிகள்...
காட்டில்
காலடி
கதிகலங்கிற்று...!!!
எனக்கு
என் அடி...!!!
ஆஹா ..அதோ சிங்கம் வருது :)) மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழி !
ReplyDeleteஆ.... பயமுறுத்தாதீர்கள்...!!!
Deleteநன்றி தோழி.
நல்ல கவிதையே... கவிதை 28 என்றால் ?
ReplyDeleteநன்றி சகோ..
Deleteகவிதைகள் ஒவ்வொன்றுக்கும் முதலில் எண்ணிக்கையிட்டு பதிவிட்டேன் அது தான் தொடர்கிறது....
28 கவிதைகளா !!! வாழ்த்துக்கள் . வாழ்த்துக்கள்.
Deleteதிக்கு தெரியாத காட்டில் தனிமையை ரசித்து ஒரு கவிதை.
ReplyDeleteத.ம.2
வணக்கம்
ReplyDeleteசகோதரி
ஆகா...ஆகா.... கற்பனை மிக அருமையாக உள்ளது இரசிக்க வைக்கும் வரிகள். பகிர்வுக்கு நன்றி
த.ம3வது வாக்கு.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ
Deleteநல்ல கற்பனை!
ReplyDeleteசொல்லிச் சென்ற விதம் மர்மம், திகில் நிறைந்து...
அருமை!
நன்றி தோழி
Delete
ReplyDeleteவணக்கம்!
காட்டினில் கால்...அடி வைத்தீர்! முழுவடியைப்
பாட்டினில் வைத்தீர் பணிந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
அடவி அடக்கமா யிருக்கும் பார்க்க
Deleteஆசையாய் அடியெடுத்து வைத்தால்
பயம் கவ்வும் நம்மை - விடாது
ஒருவழி போல் பலவழி.
நன்றி ஐயா
சப்தங்கள் சங்கமித்து
ReplyDeleteசங்கீதம்...மிதந்து...
புது வடிவில் ஒலிக்க...
புது வடிவில்
சிம்பொனி... இசை உருவாகின...!!!
அருமையான வரிகள்! மிகவும் ரசித்தோம்! சகோதரி!
அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி.
Deleteநான் கூட சிங்கம் தான் கூட வந்தது என்று நினைத்தேன்.....
ReplyDeleteகூட வந்திருந்தால் பயம் இல்லாமல் இருந்து இருக்கும்.
Deleteபடத்திற்கு ஏற்ற கவிதை:) அருமை தோழி!!
ReplyDeleteகவிதைக்கு ஏற்ற படத்தை தேர்வு செய்து இட்டேன் தோழி. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Deleteகவிதையும் அதற்கு பொருத்தமான புகைப்படமும் மிக அழகு!!
Delete