Tuesday, 30 September 2014

கீரை சூப் - 3

பாலக் சூப்

வாரே வாவ்... கீரைல சூப்பா.....

கேள்விப்பட்டதும் இல்ல.. ருசித்ததுமில்லையே...!!!

வித்தியாசமான ஆரோக்கியமான சாறு இது வாங்களேன் பார்க்கலாம்.








தேவையான பொருட்கள்

பாலக் கீரை -  1 கை பிடி
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சைமிளகாய் சின்னது - 1
பூண்டு - 2
நெய் - 1 தே.க
மிளகு & சீரகப் பொடி - 1/2 தே.க
உப்பு - ருசிக்கு
கொத்தமல்லி - சிறிது




தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 1 தே.க
பிருஞ்சி இலை - 1/2
சோம்பு - 1/4 தே.க

தாளித்து விட்டு எல்லா பொருட்களையும் வதக்கவும்.





பாசிப்பருப்பு - 1 மே.க
மஞ்சள் தூள் - சிறிது
பட்டைத்தூள் - சிறிது

பின் இவற்றுடன் சேர்த்து 2 டம்ளர் தண்ணீஈர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.





பின்  ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். அத்துடன் வேண்டிய நீர் சேர்த்து மிளகுசீரகப்பொடி போட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நெய் சேர்த்து இறக்கவும். கொத்தமல்லி தூவவும்.





                                        அசத்தலான சூப் நீங்களும் டிரைப் பண்ணுங்க....


7 & 8  பேர்களுக்கு பரிமாறலாம்.


14 comments:

  1. ஓ... வாவ்!...:)

    கீரையில் சூப்பாமோ? கேட்காமல் நானெடுத்தேன்!
    வேறென்ன நல்ல விருந்து!

    அருமை!.. வாழ்த்துக்கள் உமையாள்!

    ReplyDelete
    Replies
    1. கீரை உண்ண மார்க்கம் கண்டேன்
      அருந்தி ருசிக்க மகிழ்ந்து போனேன்
      பெற்ற இன்பம் பகிந்து கொண்டேன்
      பாரிலுள்ளோர் ருசிக்க வேண்டி.

      நன்றி தோழி.

      Delete
  2. வாரே வாவ்... கீரைல சூப்பா.....

    ரொம்ப சரிங்க .... SOUP SUPER...

    ReplyDelete
  3. இந்தவாரம் பாலக் வாரமா ? சூப், ஸூப்பர்.

    ReplyDelete
  4. சூப் பார்க்க சூப்பரா இருக்கேன்னு என் இல்லாளிடம் காட்டினேன் ,பாலக்கீரை உடனே வாங்கிட்டு வாங்க ...எனக்கும் குடிக்கணும் போல இருக்குன்னு துரத்துகிறாள் !எங்கே தேடுவேன் இந்த பாலக் கீரையை ,இந்த மாலை நேரத்தில் ?)
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. சார் காலையில புதுசா கிடைக்கும் கீரை மதுரையில....உடனே செய்து இருவரும் அருந்துங்கள்...அப்புறமாக அக்கா எப்படி இருக்குன்னு சொன்னதை சொல்லுங்கள்..

      நன்றி.

      Delete
  5. கீரையில் சூப் செய்ய முடியும் என்பது இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. சூப் செய்யலாம் என நினைத்து ஆயத்தமானேன்..அப்போது தான் ஏன் பாலக்கீரை கொண்டு செய்தால் என்ன என்று தோன்றியது... செய்து பார்த்தால் உங்கள் அண்ணன் சூப்பரா இருக்கேன்னு சொன்னாங்க...அதன் ருசியை எல்லோரும் அறிய பதிவிட்டேன்.

      நன்றி சகோ

      Delete
  6. சுவைப்போம் சுவைப்போம்
    சூப் சுவைப்போம்
    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  7. பாலக் கீரை எப்படின்னு பார்த்திட்டுதான் சூப் பக்கம் வந்தேன். நானும் இப்போதான் அறிந்தேன் கீரைசூப். இப்படி தொடர்ந்து குறிப்புகள் நல்லதா தரும் உங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி. உங்கள் அனைவரின் ஊக்கம் தான் காரணம்.

      Delete
  8. நம்ம வீட்டில கீரையை அவித்தபின் கிடைக்கும்
    வடிநீரை சூப் போல குடிப்போம்...
    உங்கள் இந்த சூப் முறையை வீட்டிற்கு போனதும்
    செய்திட வேண்டியதுதான்...
    பகிர்விற்கு நன்றிகள் பல சகோதரி...

    ReplyDelete