Thursday, 25 September 2014

கிருஷ்ண கானம்

பாடல் 19



கண்ணப்பர் என்னப்பர் ஆனாரைய்யா
கதைகள் சொல்கிறேன் கேளுங்களைய்யா   (2)


விடியலுக்கு முன்னேவந்து முகம்காட்டி
விரியசிரித்து நாளும் வழிகாட்டி
நாளும் என்னுடன் நடப்பானய்யா                            
நவின்று கொண்டு இருப்பானய்யா                                  
                                                                                                             கண்ணப்பர்

இருப்பது யாருக்கும் தெரியாதைய்யா
இணைபிரியாமல் என்னுடன் இருப்பானய்யா
பேசிக்களிப்பேன் அப்ப..னோடே
போதித்து புரிய வைப்பானய்யா  
                                    
                                                                                                             கண்ணப்பர்
நீலக்கடலின் மேல் நடந்தோமைய்யா
நித்தம் ஒருமலை போனோமைய்யா
சித்தர்கள் யாவரையும் கண்டோமைய்யா
சிந்தை மகிழ்ந்து நின்றேன் ஐயா
                                         
                                                                                                             கண்ணப்பர்
மகான்கள் கடல்போல் ஆகாயத்தில்
மெளனமொழியின் சத்தம் அங்கே
இதயம்கிழிய வலியில் துடித்தேன்
இதமாய்யானது உடலின் பாரம்
                                                                                                           
                                                                                                             கண்ணப்பர்
என்னற்ற மறையுலகம் கண்டேனங்கே
என்னப்பர் கைக்குள் நானிருந்து
அபிஷேகம் அலங்காரம் என்பெருமாள்
ஆஜானுபாகுவாய் கனவில் வந்தார்
         
                                                                                                             கண்ணப்பர்
ஊடு சக்தியாய் அவரிருப்பார்
உலகவாழ்க்கை அதைக் கடக்கா
உணர்கிறேன் நாளும் அவர்வாசம்
உத்தமனாய் நான் இருக்கேனா?

                                                                                                             கண்ணப்பர்


கும்மிப்பாட்டு மெட்டில்



மீண்டும் ஒரு கிருஷ்ணகானம் என்னுள் இருந்து எழுதிய என்னப்பருக்கு நன்றி.


15 comments:

  1. அருமையான கிருஷ்ணர் பாடல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கிருஷ்ணகானம் இனிமை..

    ReplyDelete
  3. கிருஷ்ணகானம் இனித்ததே...சகோதரி.
    விடுமுறை கழிந்த பதிவு...

    தி கிரேட் தேவகோட்டை நலமா ?
    ஊரின் தேவதைகளும் நலமா ?
    ஊர் மீசைக்காரர்கள் நலமா ?
    வீட்டில் அனைவரும் நலமா ?
    கோட்டையம்மன் கோயில் நலமா ?
    சிவன் கோயில் நலமா ?
    சிலம்பனி பெரியப்பு நலமா ?
    பிற தெய்வங்களும் நலமா ?
    அருணா தியேட்டர் நலமா ?
    அம்மச்சி ஊரணி நலமா ?
    சிலம்பனி ஊரணி நலமா ?
    தேனம்மை ஊரணி நலமா ?
    திண்ணஞ்செட்டி ஊரணி நலமா ?
    சிவன் கோயில் ஊரணி நலமா ?
    கருதாஊரணி நலமா ?
    செல்லப்பன்செட்டி ஊரணி நலமா ?
    வெள்ளையன் ஊரணி நலமா ?
    சங்கரபதி கோட்டை நலமா ?
    சத்திரத்தார் வீடு நலமா ?
    சந்தைக்கூட்டம் நலமா ?
    சரஸ்வதி வாசகசாலை நலமா ?
    சரஸ்வதி தியேட்டர் நலமா ?
    தியாகிகள் பார்க் நலமா ?
    பாலு ஸ்டோர் நலமா ?
    கிருஷ்ணா காபிபார் நலமா ?
    லக்ஷ்மி தியேட்டர் நலமா ?
    அதன் ஓரமோடும் சாக்கடை நலமா ?
    ரஸ்தா தண்டவாளங்கள் நலமா ?
    சேகர் ஸ்டூடியோ நலமா ?
    கலைமணி பிரஸ் நலமா ?
    முனியய்யா பொட்டல் நலமா ?
    முத்தாத்தாள் ஸ்கூல் நலமா ?
    ஜான்ஸ் ஸ்கூல் நலமா ?
    டி.பிரிட்டோ ஸ்கூல் நலமா ?
    அண்ணாமலை காலேஜ் நலமா ?
    வாடியார் வீதி நலமா ?
    விருசுழி ஆற்றுப்பாலம் நலமா ?
    சிவரக்கோட்டையார் வீதி நலமா ?
    கண்ணாடியார் வீதி நலமா ?
    தொண்டியார் வீதி நலமா ?
    மாந்தோப்பு வீதி நலமா ?
    காந்தி ரோடு நலமா ?
    எமது அழகாபுரி ஏரியா நலமா ?
    அங்கு அழகிகளும் நலமா ?
    எமது தி.ராம.தி. வீதி நலமா ?
    குறிப்பு – வீதிகள் கூடுகிறது விதிகள் மீறக்கூடாது என்பதற்காக நிறுத்தி விட்டேன்.

    அடிக்குறிப்பு – ஆஸ்திரேலியாவுல இருக்காரே ஒருஆளு அவரு ஊருபேருகூட என்னமோவுல சின்னக்கிராமம்... கா...கா...கா.. ஆங், ஞாபகம் வந்துருச்சு.. காரைக்குடி நலமா ?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கேட்ட அனைத்தும் நலம்.

      சிவன் கோவில் அமைதியான அழகு.
      சாய்பாபா கோவில் அழகான அமைதியான கோவில்.

      ஆஸ்திரேலிய சகோதரரின் ஊரும் நலம்.

      நன்றி சகோ.

      Delete
    2. கில்லர்ஜீ, ஒரு பல்கலைக்கழகமோ, மத்திய ஆராய்சி நிறுவனமோ இல்லாத ஒரு பெரிய நகரத்தை பற்றி கேட்டிருந்த அத்தனையும் நலம் தான். ஏனென்றால், நீங்கள் தான் அந்த ஊரை விட்டு அரபு நாட்டிற்கு போய் விட்டீர்களே!!!

      அப்புறம் பல்கலைக்கழகம், மத்திய ஆராய்ச்சி நிறுவனம் இப்படி எல்லாம் இருக்கும் ஒரு சிறிய கிராமம்,அதான் எங்க ஊரு நலமாக இல்லையாம், ஏன்னா, நான் அந்த ஊரை விட்டு வந்துட்டேனே!!!

      Delete
  4. வணக்கம்
    சகோதரி.

    அருமையான இசையில் அழகான கண்ணன் பாட்டு பகிர்வுக்கு நன்றி
    த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. சிறிது இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கிருஷ்ணன் பாடலை படிக்க் நேர்ந்தது. அருமை.

    ReplyDelete
  6. கண்ணனுக்கோர் கும்மிப்பாட்டு..
    மிகவும் அருமை சகோதரி...
    ஒலிப்பேழையுடன் வெளியிட்டிருந்தால்
    இன்னும் அழகாக இருக்கும்...
    கும்மிப்பாட்டு கேட்கையில்
    மனம் அப்படியே குதூகலித்து தாளம் போடும்...
    முரளிதரனுக்கு அருமையான
    முப்பாட்டன் கும்மி சாதாரி .. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. சிறந்த பக்திப் வரிகள்
    தொடருங்கள்

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  8. ammadiyov nan ninaithen varuval poriyal la than asathukireerkal enru parthal ippadi asathukireerkale sakalaakalavalliya varukiren varukiren valthukkal amma asathunkada.

    ReplyDelete