கால்களுக்கு முத்தம்
கடலிடம் மட்டும்
தொடர்கதைகளாய்...!
தொடர்கிறது...
வியப்பு மாளவில்லை
விரிகின்ற நீர்பரப்பில்
மண்ணும் நுரைகளும்
நீரில் கலந்து
ஓவியங்களாய்...!
தொடர்கின்றன...
நிற்க நேரமில்லை
காட்சிகளைக் கண்கள்
நிழற்படம் எடுக்க...!!!
ஓடும் உலகமதில்
ஒய்யாரமாய்...
ஓ...என
கடலைக் கண்களால் - சுவைக்க
புது விருந்து
புன்னகையுடன் நான்...
நன்றி இயற்கை அன்னையே.
படம் - கூகுளுக்கு நன்றி
காட்சிகளைக் கண்கள்
ReplyDeleteநிழற்படம் எடுக்க...!!!
ஆஹா கவிதை அருமையா எழுதுறீங்களே.... அப்படீனா ? இந்த தடவை கரண்டியை நான் பிடிக்கலாமென்று நினைக்கிறேன்.
ஆஹா...அதிலும்...கலக்கவறீங்களா...வாங்க..
Deleteநன்றி
மண்ணும் நுரைகளும் ஓவியங்களாய்.. ரசனைக்காரர்தான் நீங்கள்.
ReplyDeleteநன்றி சகோதரரே.
Deleteநன்றி இயற்கை அன்னையே!!!
ReplyDeleteஇயற்கை அன்னைக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும் ! ரசனை மிக்க கவிதை!
ஆம்..எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.... நன்றி ஐயா.
Deleteஇயற்கை அன்னைக்கு இதை விட அழகாக நன்றி சொல்ல முடியாது.
ReplyDeleteவாழ்த்துக்கள்
இயற்கையுடன்...இணைந்து இருக்கும் போது நன்றியுணர்வு வந்து விடும் எல்லோர்க்கும்.
Deleteநன்றி சகோ
அன்பின் உமையாள் காயத்ரி -
ReplyDelete//
நிற்க நேரமில்லை
காட்சிகளைக் கண்கள்
நிழற்படம் எடுக்க...!!!
//
கவிதை அருமை -
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
Delete"மண்ணும் நுரைகளும்
ReplyDeleteநீரில் கலந்து
ஓவியங்களாய்...!
தொடர்கின்றன..." என
மின்னும் வரிகளில்
இயற்கையைக் காண்கிறேன்!
தொடருங்கள்