Monday, 29 September 2014

சிரிச்சா போச்சு...

நீங்க சிரிப்பேளா...? இல்லை அழுவேளா...?

ஏண்டி...? புதுசா கேக்கிற என்ன பார்த்து...

புதுசா போட்டேன் பதிவு  சிரிச்சாப் போச்சு  அதான்...

வர்ரவாள் எல்லாம் சொல்லுவா..? எனக்கு எதுக்குடி வம்பு..

ம்...கூம்...
சிரிச்சா போச்சு : 1

கணவன் : ஆ..என்ன சாதத்துல..கல்லு..

மனைவி: ம்...

கணவன்: என்ன இது மண்ணா இருக்கு ... புளியை சரியா வடிகட்டலையா..? சாம்பார்ல...

மனைவி: எல்லாம் வடிகட்டியாச்சு...பருப்புல இருக்கும்...

கணவன்; இப்படி கல்லயும் மண்ணையுமா ..போடுறீயே...சாப்பிட...

மனைவி: என்ன செய்றது கடையில இல்ல கலப்படம் செய்றாங்க..நல்ல கடையின் பார்த்து வாங்கினாலும் அப்படித்தான் இருக்கு...

கணவன்: இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...நீ பார்க்கனும் இல்ல...

மனைவி: வெள்ளெழுத்து கண்ணாடி வாங்கித்தர முடியலை என்னத்தை பார்க்கிறது..?கூம்

கணவன்: என்ன முனங்கிற.. நாளைக்கும் கல்லும் மண்ணும் தானே வைக்கப் போறே....?

மனைவி: என்ன செய்து என்ன..நாளை பார்க்கலாம்.


நாளை

கணவன்; என்ன இரண்டு தட்டை மட்டும் மூடி வைத்து இருக்க... மற்ற சட்டி எல்லாம் எங்கே..?

மனைவி: இதை சாப்பிடுங்க மற்றது பின்னாடி வரும்.

கணவன்: அஹா...(ஆச்சரியம்)  ...!!! என்ன இது..?

மனைவி: நீங்க கேட்டீங்களே நாளைக்குமிது தானேன்னு அதான் அதையே வச்சுட்டேன்  ஒரு பிளேட் கல்லு,ஒரு பிளேட் மண்ணு...
என்னத்தச் சொல்ல கலி முத்திடுச்சு...  இப்படி எல்லாம் என் அரசாட்சியில் பெண்கள் யாரும் இல்லை என நினைக்கிறேன். அம்மாடியோவ் ஒரு நிமிஷம் மூச்சு முட்டிடுச்சு... என்னத்தைச்சொல்ல... டிவியில் இதை எல்லாம் பார்க்கக் கூடாது. இவர்கள் டி ஆர் பி க்காக செய்வார்கள்.

அரசே அரசே...கணவன் மனைவி இருவர் பிரச்சனையோடு வந்திருக்காங்க...

என்ன பிரச்சனை என்று அறிந்து கொண்டாயா..?

ஆம் அரசே..தாங்கள் இப்போது சொன்ன மூச்சு முட்டல் தான் வந்திருக்கிறது...

என்ன..?

ஆம் அரசே அவர்களும்...
கூட்டமாய் டிவிக்காரர்களும் வந்து இருக்கிறார்கள்....அவர்கள் நடுவில் மூச்சு முட்டி செய்தி சொல்ல வந்தேன் மன்னா...

வந்துட்டாங்கையா வந்துட்டாங்க.... ஹாய்..யா  சிம்மாசனத்துல சாய்ந்து ஒரு புரோகிராம் பார்த்துடக் கூடாதே....
சிரிச்சாப் போச்சு : 2

கணவன்:  வாயைய் மூடு

மனவி : மூடிட்டேன்

கணவன் : அடிப்பாவி நான் சொன்னது உன் வாயைய் என் அம்மா வாயைய்யல்லசிரிச்சாப் போச்சு : 3

அப்பா: புடித்த முயலுக்கு மூணே கால், மூணே கால்... அப்படிங்கிறா உங்க அம்மா..

பையன்: எப்படிப்பா ...ஏழரைக்கால் வரும்...?

என்னமா இந்தப் பொண்ணு எழுதி இருக்கு மறக்க முடியுமா...?

சிறிய புது முயற்சி....பொறுமையாக படித்த தங்களுக்கு நன்றி. எல்லோரும் ஜோக்ஸ் எழுதறாங்களே நாமளும் எழுதினால் என்ன...? அப்படின்னு ஒரு ஆசை... அதனால் வந்த வினை.

கிறுக்குப் பய புள்ள  எழுதிடுச்சு.... போதாயி போ..

நல்லாவருவ...நல்லாவருவ..வேற என்னத்தைச் சொல்லுறது.
படம் கூகுள் நன்றி
19 comments:

 1. வணக்கம்

  வித்தியாசமான பதிவு. நல்லஉரையாடல் வடிவில்... நானும் இரசித்துப்படித்தேன். தொடருங்கள் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரூபன்..முதலில் வந்து ஊக்கப்படுத்தி கருத்து இட்டமைக்கு நன்றி. இரசித்து படித்தமைக்கும் நன்றி

   Delete
 2. புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்! சோடை போகவில்லை எழுத்து! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா.. சொல்லுறீங்க...நீங்க இதுல நிறைய அனுபவசாலி...நன்றி சகோதரரே.

   Delete
 3. புதிய முயற்சியா ? அருமை தொடங்குங்கள் நானும் பழகி கொள்கிறேன்.

  ReplyDelete
 4. எப்படி எழுதுவது ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் கூட சொல்லித் தர மாட்டார்கள் .எழுத வேண்டுமென்ற உந்துதலே உங்களை நிறைய எழுத வைக்கும் ,அந்த வகையில் உங்களின்
  புது முயற்சி தொடர வாழ்த்துகள்!என்றும் என் ஆதரவு தொடரும் !
  த ம 1

  ReplyDelete
 5. எப்படி எழுதுவது ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் கூட சொல்லித் தர மாட்டார்கள் //
  ஆம் உண்மைதான் ஐயா.

  எழுத வேண்டுமென்ற உந்துதலே உங்களை நிறைய எழுத வைக்கும் ,//
  நூத்துல ஒரு வார்த்தை.... உண்மைதான் அதுதான் என்னை எழுத வைத்தது.

  தங்களின் வாழ்த்துக்களுக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி ஐயா.

  உங்களை போன்றோர்களின் சிரிப்பு வலைத்தளங்கள் காண்கையில் நாம்மால் நகைச்சுவையுடன் எழுத முடியுமா என்ற கேள்வியெழுந்தது,, அதன் முயற்சி தான் இது.

  மீண்டும் ஒரு முறை நன்றி ஐயா.

  ReplyDelete
 6. என் எழுத்தும் உங்களை எழுதத் தூண்டுகிறதை என்பதை அறிய மிகவும் மகிழ்ச்சி !

  ReplyDelete
 7. ஆரம்பமே அசத்தலாக இருக்கு!..
  போகப் போக சிரித்தே வயிறு புண்ணாகிடும் போல இருக்கே!..:)

  வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
 8. சிறந்த நகைச்சுவைப் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 9. ஹை! சகோதரி! எங்களைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக் கொண்டோம்! வித்தியாசமான பதிவு! ரசித்தோம் சகோதரி! இந்த மாதிரி சிரிக்க வைங்க எங்கள! முதல் ஜோக் "அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா " மாதிரி இருக்குல்ல?!!!!!!

  தொடருங்கள்! இன்னும்!

  ReplyDelete
  Replies
  1. முதல் இது ஜோக் இல்லை சும்மா ஒரு முன்னுரை மாதிரி ஆரம்பிக்கலாம்னு.... போட்டேன்.

   ஆமா அடுத்தாது அம்புஜத்தை பார்த்தேளாவில் வரும் முன் பேச்சுப் போல...

   நன்றி ஐயா.

   Delete
 10. மிக நல்ல முயற்சி சகோதரி. அருமை. வாழ்த்துக்கள்.

  "//ஒரு பிளேட் கல்லு,ஒரு பிளேட் மண்ணு...//" - உங்கள் கணவரை நினைக்கும்போது எனக்கு பாவமாக இருக்கிறது.

  ஆமாம், சமையல் குறிப்பு எல்லாம் எழுதுகிறீர்களே, அதெல்லாம் கூட இப்படி கல்லு மன்னோட தான் சமைப்பீர்களா??

  ReplyDelete
  Replies
  1. நீங்க இந்தப் பக்கம் வறேன்னு சொல்லி இருக்கீங்க இல்ல... அப்போ சாப்பிட்டுவிட்டு ( சாப்பாடு தான் தருவேன் கல்லு மண்ணுண்ணு பயப்பட வேண்டாம்) அப்போ சொல்லுங்க... நான் சமையல் குறிப்பு போடுவது ....எப்படின்னு...? சும்மா தான் சகோ...நன்றி.

   Delete
 11. puthiya muyarchikku valthukkal thondinaal thane puthaiyal edukkalaam. yar yarukkulla enna thiramai ullathu enpathu yarukku theriyum muyatchi seithal thane theriyum illaiya uma asathunkamma asathunka. valthukkal ...!

  ReplyDelete
  Replies
  1. ஊண்மைதான் சகோதரி தோண்ட தோண்ட தான் தெரிகிறது நமக்கு எது இருக்கிறது எது இல்லை என்பது.... நன்றி சகோதரி

   Delete