சமையல் பக்கம் போய் நிறைய நாட்கள் ஆகிவிட்டது..... ஒரு ஸ்நாக்ஸ் பண்ணி ருசிக்கலாமா...?
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 மே.க
கேரட் - 1 கோப்பை
முட்டை கோஸ் - 1 கோப்பை
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
குடமிளகாய் - 1 கோப்பை
தனி மிளகாய் பொடி - 1/8
உப்பு - ருசிக்கு
கரம் மசாலா- 1/4 தே.க
சீரகத்தூள் - 1/4 தே.க
தக்காளி & மிளகாய் கெட்சப் - 1 மே.க
சோயா சாஸ் - 1 தே.க
கோதுமை மாவு - 2 மே.க
ஸ்பிரிங் ரோல் பாஸ்ட்ரி - 1 பேக்கட்
(Spring Rool Pastry) - இது கடைகளில் தயார் நிலையில் கிடைக்கிறது.
காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள்.
எண்ணெய் காயவும் வெங்காயம்,பச்சை மிளகாயைப் போடவும்.
பின் கேரட் போட்டு வதக்கவும்
குடமிளகாய்,முட்டைக் கோஸ் போட்டு வதக்கவும்.
காய்கள் பதமாக வதங்கினால் போதுமானது. பின் உப்பு பொடிகள்,சாஸ் வகைகளை சேர்க்கவும்
காய்களில் நன்கு சாரவும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
பாஸ்ட்ரியில் வைத்து சுருட்டவும்
கோதுமை மாவினை நீர் சேர்த்து பசை போல் செய்து கொண்டு
தடவி படத்தில் உள்ளது போல் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
எண்ணெய்யில் பொன்னிறமாக பொரியுங்கள்.
என்னங்க நல்லா இருக்கா...?
அட டேஸ்டைச் சொல்லவில்லை...!
படத்தைச் சொன்னேன். நீங்க பண்ணி சாப்பிட்ட பின் தானே டேஸ்ட் தெரியும்.
சூப்பராக இருந்தது. முயற்சிங்க... ok வா.
குறிப்பு
உங்களுக்கு பிடித்த காய்களை சேர்த்துக்குங்க
பீன்ஸ்,பட்டாணி எல்லா நிற குடமிளகாய்களையும் சேர்க்கலாம்.
சில சமயம் பள்ளிவிட்டு வரும் செல்லங்களுக்கு நீங்க ப்ளான் பண்ணலைனாலும் அன்றைய பொரியலைச் சுருட்டி சுடசுட கொடுக்கலாம். பொறியலும் காலியாகிடும்,காய்கறி சாப்பிடலைனு இருக்கிற வருத்தமும் போயிடும்மில்ல. என்ன நான் சொல்றது...?
Wow...Super......!!!!!!!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
சுவையான உணவு முறை செய்முறை விளக்கம் அனைவரும் விளங்கும் படி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆஹா..இப்பவே செய்யனும் போல இருக்குங்க..நன்றி அம்மா.
ReplyDeleteவருகைக்கும்,கருத்திற்கும் நன்றி. சுலபம் தான் செய்யுங்கள்.
Deleteஅருமை! பார்க்கவே கை துருதுருக்குது எடுத்துச் சாப்பிடணும்னு..:)
ReplyDeleteநானும் இதேபோல்தான் செய்வதுண்டு.
காய்கறி சேர்வையில் சிறு துண்டு இஞ்சி குறுணியாக வெட்டிக் கட்டாயம் சேர்ப்பேன்.
மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும்!
எண்ணைப் பதார்த்தமாகையால் வயிற்றில் வரும் உபாதையிலிருந்தும் விடுதலை கிடைக்கும்!
பகிர்விற்கு நன்றி சகோதரி!
வாழ்த்துக்கள்!
அடுத்த முறை செய்யும் போது இஞ்சியையும் சேர்த்து செய்து பார்க்கிறேன். குறிப்புக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி.
ReplyDeleteபார்க்கவே நாவில் சுவை ஊறுகிறது,நானும் முயற்சிக்கிறேன்
ReplyDeleteநீ இந்தப்பக்கம் வந்து நிறைய மாதங்கள் ஆகிவிட்டதே. முயர்சித்து விட்டு சொல். நன்றி
Deleteஇதே மாதிரி தான் நான் ரோல்ஸ் செய்வேன்.அதில் ப்ரெட் கரெம்ஸ் ல புரட்டி பொரிப்பது.இனி இப்படி செய்து பார்க்கிறேன் .நன்றி
ReplyDeleteஅப்படியா...நீங்கள் உடனேயே செய்து பார்ப்பீர்கள்.இது போல் செய்து பார்த்து சொல்லுங்கள் நன்றி பிரிய சகி.
Deleteபார்த்ததும் படக்குனு கையை நீட்டினேன் எடுக்க பிறகுதான் தெரிந்தது ஃபோட்டோவென்று... ஸூப்பர் ஆனால் ? ருசிக்கத்தான் முடியலை.
ReplyDeleteநன்றி சகோ.
Deleteஅப்படியே அபுதாபிக்கு ஒரு பார்சல் சகோதரி....
ReplyDeleteஅனுப்புகிறேன் சகோதரரே.
Deleteசிறந்த வழிகாட்டல்
ReplyDeleteதொடருங்கள்
எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.
தாங்கள் விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி! தங்களின் அன்புமிக்க மிட்டாயை பெற்றுக் கொள்கின்றோம்! இப்படிப்பட்ட அன்புள்ளங்கள் வலை முழுவதும் இருக்கும் போது என்ன கவலை சொல்லுங்கள்!!?
ReplyDeleteஇப்படி எல்லாம் ஃபோட்டோ போட்டு நாக்கில் நீர் ஊற வைக்கக் கூடாது...சொல்லிட்டோம்...இங்க ஒரு பார்சல்!!!!
இதைச் செய்வதுண்டு. ஆனால் பேஸ்ட்ரி இங்கு கிடைப்பதில்லை எனவே வீட்டில் மைதாவில் செய்வதுண்டு.....(அதில் கொஞ்சம் ப்ரெட் க்ரம்ப்ஸ் இல்லாமல் நடு பாகத்தைக் கலந்தும்)
கீதா அமெரிக்காவில் இருந்த போது செய்ததுண்டு ரெடிமேட் பேஸ்ட்ரி ஷீட்ஸ் வாங்கி......
மிக்க நன்றி என்ன நாங்கள் செய்தாலும், மற்றொருவர் கற்றுத் தருவது செய்து தருவது வித்தியாசமான சுவைதானே! பார்சல் மறக்காமல் அனுப்பிடுங்க ஹிஹிஹி...
இப்படிப்பட்ட அன்புள்ளங்கள் வலை முழுவதும் இருக்கும் போது என்ன கவலை சொல்லுங்கள்!!? // ஆம் உண்மைதான் அன்பான வலை நண்பர்கள் இருக்கும் போது கவலையில்லை தான். அவர்கள் எனக்கு கொடுத்த மிட்டாயை நான் பகிர்ந்து கொண்டேன். ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி.
Deleteஒன்று கேரளாவுக்கு மற்றொன்று சென்னைக்கா..அனுப்புகிறேன் நண்பர்களே.
நாம செய்றதை விட அடுத்தவர்கள் செய்து கொடுக்கையில் அருமைதான். நன்றி
சில சமயம் பள்ளிவிட்டு வரும் செல்லங்களுக்கு நீங்க ப்ளான் பண்ணலைனாலும் அன்றைய பொறியலைச் சுருட்டி சுடசுட கொடுக்கலாம். பொறியலும் காலியாகிடும்,காய்கறி சாப்பிடலைனு இருக்கிற வருத்தமும் போயிடும்மில்ல. என்ன நான் சொல்றது...?//
ReplyDeleteஓ பீ அடிக்கலாம் றீங்க! ஹாஹாஹா...சும்மா தமாஷுக்கு ...எங்கேயும் இந்த தில்லு முல்லு எல்லாம் நடப்பதுண்டு!
ஆமாம். பாஸ்ட்ரி சீட் ரெடியாக இருக்கும் பட்சத்தில் திடீரென செய்து விடலாம் இல்லையா.? தில்லு முல்லு கூட சில சமயம் ருசியாக இருக்கும் இல்ல...ஹா..ஹா..ஹஆ.. என்ன நான் சொல்லுறது..
Deleteஆஹா வந்தவுடனேயே களத்தில் குதித்து விட்டீர்களே .கெட்டிக்காரி. சூப்பர் ம்..ம்..ம்..லுக்ஸ் யம்மி.இப்போது எல்லாம் இதே மாதிரி செய்து சப்பாத்தியில் வைத்து சாப்பிடுவோம் இங்கு இல்லையேல் சப்பாத்தி மாதிரி( றப் ) வாங்கி உள்ளவைத்து சுத்தி சாப்பிடுவோம் ஆனால் பொரிப்பது இல்லை .நமக்கு அதெல்லாம் ஆகாதே. மிக்க நன்றி வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஆம். இல்லைனா....... எப்படி உங்க கூட எல்லாம் பேசுறதாம். அப்போதானே ..இந்தப்பக்கம் எட்டிப் பாப்பீங்க...அதான்
Deleteநாங்களும் சப்பாத்தியில் தான் சாப்பிடுவது, எப்போதாவது ஒரு மாற்றத்திற்கு என செய்தேன். மற்றவர்கள் செய்து சாப்பிடலாம் இல்லையா...? அவர்களுக்கு இந்தக் குறிப்பு உபயோகமாக இருக்கும் அல்லவா...? இல்லையா..?
நன்றி தோழி.
தமிழில் ‘பொறியல்’ அல்ல ‘பொரியல்’ என்பது தான் சரியானது. தமிழ்நாட்டில் பேச்சுத் தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்குமிடையே பெரிய வேறுபாடிருப்பது இப்படியான எழுத்துப் பிழைகளுக்குக் காரணமாக இருக்கலாம். மன்னிக்கவும், உங்களின் பதிவில் பிழை பிடிப்பது எனது நோக்கமல்ல.
ReplyDeleteமுதலில் தங்களின் வருகைக்கு நன்றி.
Deleteபிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.சரி செய்து விட்டேன் சகோதரரே.
தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். வார இறுதி நாட்கள் மிகவும் பிஸியாக செல்வதால் வலைப்பக்கம் வர இயலவில்லை.
ReplyDeleteவெஜிடபுள் ஸ்பிரிங் ரோல் - கடையில் வாங்கித்தான் சாப்பிட்டிருக்கிறேன்.
இனிமேல் செய்து பார்ர்க வேண்டும். (செய்து பார்க்கபோவது நான் இல்லை என்று உங்களுக்கு தெரியும் தானே)