குழல் நாதமே தரும் கீதமே
மனம் போகுமே திசை நோக்கியே
இசை வெள்ளமே எனை அணைக்குமே
இளைப்பாரவே சுகம் நல்குமே குழல்
உன் கால்தடம் என்னை அழைக்குதே
கண்மூடியே கால் இழுக்குதே
வரும் வழியிலே மணம் வீசுதே
மனம் முழுவதும் மதுராபுரியே குழல்
என்ன செய்தாய் நாதா..?ஏன் இந்த வேட்கை..
உன்மீது.. .தான் எனக்குள்.....தான்
மனமோகனா மதுசூதனா
கீதையின் நாதா ராதையின் தோழா குழல்
எங்கும் இங்கும் இருப்பாய் எப்போதும்..... வருவாய்
கண்ணயர்ந்த கண்ணா...கண்கள் மூடி நடிப்பாய்
முரளீதரா வேணுகோபாலா
முடங்கிமலராய் உன்னடி சேர குழல்
கண்ணாமூச்சி யாட்டம் காலமெல்லாம் ஏன்டா
கற்கண்டாய் நீயும் இனிமையாய் வாடா
ஆடிப்பாட வேண்டும் ஆனந்தமாக
அன்பில் ஊறிப் பதமாய் தேனும்சுளையுமாக குழல்
படம் - கூகுள் நன்றி.
மீண்டும் ஒரு பாடல் என்னுள் இருந்து எழுதியமைக்கு நன்றி கண்ணா.
வணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் பாடல் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாடலை இரசித்தமைக்கும்,த.மவுக்கும் நன்றி.
ReplyDeleteகடைந்தெடுத்த நல்ல வரிகள் வாழ்த்துக்கள் கவிஞரே....
ReplyDelete-அடுப்பாங்கரைலிருந்து... அழகர்.
நன்றி சகோ...
Deleteஅடுப்பே .... திருப்பதி... அப்படின்னு நம்மூர் பக்கம் சொல்லுவாங்கயில்ல...!
வாவ்.. நீங்களே எழுதியதா.. சூப்பர்.. சுப்புத்தாத்தா கேட்டால் பாட்டாவே பாடிடுவார்..!
ReplyDeleteஆமாம்னு எப்படி சொல்ல....
Deleteஎன்னை கருவியாக்கி கண்ணன் தான் வடிவுடன் எழுதுகிறான் என்று நம்புகிறேன்.
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரரே.
This comment has been removed by the author.
ReplyDelete//கடைந்தெடுத்த நல்ல வரிகள்// கில்லர்ஜி, வெண்ணெய் திருடனை பற்றி பாடலுக்கான கமென்ட் அருமை.. :) ;)
ReplyDeleteஎனது வார்த்தையை சரியாக புரிந்து கொண்டமைக்கு முதலில் வாழ்த்துக்களும், பிறகு நன்றியும் மிஸ்டர். ஆ..........வி அவர்களே..
Deleteஇப்படிக்கு
அப்பாவி கில்லர்ஜி.
கண்ணதாசனின் அந்த கிருஷ்ணகானத்தை நினைவு படுத்தியது உங்களின் கானம் !
ReplyDeleteத ம 3
தங்களின் முதல் வருகைக்கும், கருத்திற்கும் ,த மவுக்கும் நன்றி ஐயா.
Deleteஅருமையான ஒரு கானம். தாங்கள் இந்த கிருஷ்ண காணத்தை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு நூலாக வெளியிடலாமே...
ReplyDeleteநூலாகவா.... அப்படி எதுவும்..இதுவரை தோணவில்லை. இனி அதைப் பற்றி யோசிக்கிறேன். தங்களைப் போன்றவர்களின் ஊக்கமும்,அன்பும் கிடைக்க முயல்கிறேன். நன்றி சகோ...
Deleteகிருஷ்ணகானம் செம ரசனை. என்ன செய்தாய் நாதா......ஏன் இந்த வேட்கை!
ReplyDeleteநன்றி சகோ.
Deleteஅழகான பக்திக் கவிதை, தங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகிறேன், அருமை இனி தொடருவேன்...
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
ReplyDeletenanraka raaham kaddi paaduverrkal pol therikirathe kannan pakthaiya ippadi uruki uruki padukireerkale asanthidden illa arumai arumai thoali anaithaiyaiyum seekiram parkiren ok va thodara valthukkal .
ReplyDeleteகிருஷ்ணன் அவரை என்ன வென்று சொல்வதும். மாயாதாரி இல்லையா.. அவர் கொடுக்கிற வரை பாடல்கள் ...வெளிவரட்டும் ...நன்றி தோழி..நேரம் இருக்கும் போது பாருங்கள்.
Delete