ஆரோக்கியமான...தயிர் பச்சடி. பாலக் கீரையில்.
வித்தியாசமாக, சுவையாக, சத்தான இதை சப்பாத்திக் சேர்த்துக் கொண்டால்.....சூப்பர் தாங்க. மற்றவற்றுடனும் சாப்பிடலாம். நம்ம இஷ்டம் தானே...!!
தேவையான பொருட்கள்
பாலக்கீரை - 1கட்டு
வெங்காயம் நடு அளவில் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 1 கை பிடி
உப்பு - ருசிக்கு
தயிர் - 1 அ 1/2 கோப்பை
எண்ணெய் 1/2 தே.க
பாலக்கீரையை சிறியதாக நறுக்கிக் கொண்டு 1/2 தே.க எண்ணெய் விட்டு வதக்கி பின் சிறிது நீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்
கீரை சூடு ஆறின பின் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கலக்கவும்
இதோ ரெடி ஆகிடுச்சே...!!!
சப்பாத்தியுடன்.....ஆஹா....பேஷ்...பேஷ்....நன்னாயிருக்கே....!!!
அடடே...என்னங்க .... வேகமா கிளம்பிட்டீங்களே....என்னங்க.... உங்களைத்தான்... ok ok இவ்வளவு ஆசையா செய்யப் போற உங்களை நான் தொந்தரவு செய்யலைங்க... சரி மீண்டும் சந்திப்போம்.
அட, பாலக் கீரையை வைத்து இப்படியும் செய்யலாமா? சத்தான சைடிஷ். மிகவும் நன்றி உமையாள்.
ReplyDeleteவாங்க..முதலாவதாக வந்து கருத்திட்டமைக்கு நன்றி கீத மஞ்சரி.
Deleteசப்பாத்திக்கு சைடிஷ் என்ன செய்வது என யோசிக்கதேவையில்லை. நல்ல குறிப்பு்நன்றி.
ReplyDeleteஆம் சில சமயம் சப்பாத்திக்கு விரைவா என்ன செய்யலாம் என இருக்கும் இல்ல. அப்போது இது கைகொடுக்கும். நன்றி பிரிய சகி.
Deleteசகோதரி தெரியாமல்தான் கேட்கிறேன் கீரையில் பாலக்கீரை என்று இருக்கிறதா ? ஹிந்தியில் கீரையை பாலக் என்று சொல்வார்கள்.
ReplyDeleteஎமது புதிய பதிவு My India By Devakottaiyan காண்க ஏனோ தெரியவில்லை டேஷ்போர்டில் வரவில்லை ஒருவேளை தங்களது டேஷ்போர்டில் வந்திருந்தால் ? எனக்கு தெரியப்படுத்தவும் நன்றி.
ஆம். இருக்கிறது. நம்ம ஊரிலும் பாலக் கீரை என்றுதான் சொல்வார்கள். ஹிந்தியிலும் தமிழிலும் சில சொற்கள் ஒன்றாக இருக்கும் இல்லையா.. தெரியப் படுத்துகிறேன். நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
பார்த்தவுடன் சாப்பிடச்சொல்லுது ஆனால் எடுத்து சுவைக்க முடியாது.... பார்க்கலாம் வரும் காலங்கங்களில்.. சாப்பிட ஒரு வாய்ப்பு வரும்.... சுவையான உணவுபற்றிய அறிமுகம் சிறப்பு... பகிர்வுக்கு நன்றி த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சாப்பிட காலம் விரைந்து வரட்டும்...நன்றி
Deleteநன்றி ஐயா
ReplyDeleteவித்தியாசமான சைட் டிஷ். பகிர்ந்துகொண்டதற்கு நன்றி
ReplyDeleteஎவ்வளவு சுலபமான டிஷ்! செய்துடலாம். பசலைக் கீரையும் இதே குடும்பம்தானே?
ReplyDelete