Friday, 5 September 2014

தாயின் முகம் - கவிதை 30

பாடலாக....
சொந்த ஊருக்கு போகப் போறேன்
சொந்த பந்தங்களை பார்க்கப் போறேன்
ஈரேழு நாட்கள் விடுமுறையாம்
ஈடுபாட்டோடு போகும் நாளாம்


குழவி கண்டு மகிழப் போறேன்
குந்தி கொஞ்சி பேசப் போறேன்
கண்ணுள் மறைந்த கடலின் அலை
தொண்டைக்குள் வந்து ஏன் அடைத்தாய்..?

தாய் மென்மையின் பாரம் தாளாமல்
தத்தளிக்கும் யாருக்கும் தெரியாமல்
தாய்இறை யுணர்வு புரியாது
தழும்பல் ஏனோ..? தெரியாது

அன்பின் பூட்டு உடை பட்டாலும்
அடுத்தவர்க்கு சத்தம் கேட்காது
ஈன்ற பொழுதின் உணர்வுதானே..
இப்போது எனக்கும் வந்துதித்தது

ஒருகை தடவலில் உள்ளமது
ஓராயிரம் முறை கொஞ்சலாகும்
கண்டேன் இறைவன் என்பது போல்
கண்கள் நிறையும் தன்னாலே.

கண்டேன் உன்னை நேரடியாக
கண்கள் சிரித்தன உயிர்வந்து
காதல் மறைக்கா முகம் போலே
பூரித்த தாயின் முகம் அதுவே.
படம் - கூகுள் - நன்றி

அம்மாடியோ... இவ தொல்லை இரண்டு வாரத்திற்கு  இல்ல...!!!


28 comments:

 1. சொந்த பந்த உறவுகைள விட்டு நாட்டுக்கு தூரமாய் மனதுக்கு பாரமாய் வாழும் அனைத்து உள்ளங்களுக்கும் ஆறுதலாய் அமைந்த கவி.

  வழக்கம் போல ஒரே கல்லுல இரண்டு மாங்காய் அடிச்சுட்டீங்க,, பதிவு + விடுமுறை விண்ணப்பம், விடுமுறையை நலமாய் கழித்திட வாழ்த்துக்கள்.

  குறிப்பு - உங்களால் உருவான நாளை வரும் எனது பதிவை கண்டிப்பாக காணவும். பதிவின் தலைப்பு ‘’சூட்தண்’’

  ReplyDelete
  Replies
  1. சொந்த பந்த உறவுகைள விட்டு நாட்டுக்கு தூரமாய் மனதுக்கு பாரமாய் வாழும் அனைத்து உள்ளங்களுக்கும் ஆறுதலாய் அமைந்த கவி.//..

   அவர்களுக்குத் தான் இது நன்கு புரியும் .....

   வழக்கம் போல ஒரே கல்லுல இரண்டு மாங்காய் அடிச்சுட்டீங்க,, பதிவு + விடுமுறை விண்ணப்பம், விடுமுறையை நலமாய் கழித்திட வாழ்த்துக்கள்.//...

   விடுமுறைக்கு போகும் போது
   விட்டுச் செல்லலாம் ஒரு கவிதை...
   விதியின் வலையில் வாழ்க்கை
   விக்கித்து நிற்போம் நாமே.

   நாளை உங்கள் பதிவை சென்ற பின் அங்கு கண்கிறேன். காலதாமதம் ஆகும் சகோதரரே.

   வாழ்த்துக்களுக்கு நன்றி.

   Delete
 2. மனதை தொட்டுவிட்டன கவிவரிகள். மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க. ஊருக்கு பயணமா ,சிறப்பாக ,மகிழ்ச்சியாக விடுமுறையை கழித்துவிட்டு வாருங்கள்.வாழ்த்துக்கள்.Happy Journy.Take Care.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சியாக விடுமுறை கழிந்தன. மிக்க நன்றி தோழி.

   Delete
 3. விடுமுறையை சிறப்பாக கழிக்க என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 4. விடுமுறையைக்கு ஊருக்குச் செல்வதைக் கூட அழகாக கவிதை மூலம் சொன்ன சகோதரி....தங்கள் விடுமுறையும் கவிதையாய் இனிக்க வாழ்த்துக்கள்! அப்போ விடுமுறை முடிந்து வரும் சமயம் எண்ணற்ற கவிதை வரும்னு சொல்லுங்க! பாத்துங்க லக்கேஜ் வெயிட் கூடிடாம.....

  ReplyDelete
  Replies
  1. விடுமுறைகள் கவிதையாய் இனித்தன சகோதரரே.

   அப்போ விடுமுறை முடிந்து வரும் சமயம் எண்ணற்ற கவிதை வரும்னு சொல்லுங்க! பாத்துங்க லக்கேஜ் வெயிட் கூடிடாம..... //

   லக்கேஜ் வெயிட் கூடிப்போச்சுங்க...உங்களுக்கு ஞான திருஷ்டி இருக்குன்னு... நினைக்கிறேன் சகோதரரே... என்னுடைய கல்லூரி நாட்களில் நான் எழுதிய கவிதை நோட்டு கிடைத்தது...

   அவ்வப்போது பதிவிடுகிறேன். எனக்கு அதை இப்போது படிக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.

   நன்றி சகோ.

   Delete
 5. ஓஹோ அம்மாவின் அரவணைப்பில் விடுமுறையை களிக்கப் போகிறீர்களா ம்...ம்..ம்.. சிறப்பாக களிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .....!

  ReplyDelete
  Replies
  1. அம்மாவின் அரவணைப்புக்கு ஆசை...ஆனால் எனக்கு கொடுத்துவைக்கவில்லை...15 வருடங்கள் ஆகிவிட்டது. இளைப்பாற.....? எனக்காக அவர்கள் முன்பு காத்திருந்தது மட்டும் நினைவில்.
   நன்றி சகோதரி.

   Delete
 6. ‘’அன்பு நண்பியே வணக்கம், விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்’’ பெற்றுக்கொள்ளவும்.
  அன்புடன்
  கில்லர்ஜி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ. பெற்றுக்கொள்கிறேன்.

   Delete
 7. ஐயைய்யோ என்ன இது சகோதரி நாங்கள்கொடுத்த கமென்ட் வரலை? காக்கா உஷ் ஆகிவிட்டதோ?!!!

  ReplyDelete
  Replies
  1. இல்லை...சகோதரரே. ஊரில்...பார்க்க முடிந்த சமயம் மட்டும் கருத்துரையை வெளியிட்டேன். அதான் கால தாமதம் ஆகிவிட்டது.

   Delete
 8. வணக்கம்


  தங்களுக்கு  விருது இரண்டை பகிர்ந்துள்ளேன் அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்


  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதோ விருது அள்ளிச் செல்லுங்கள்....:

  -நன்றி-

  -அன்புடன்-

  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ. ஏற்றுக்கொள்கிறேன்.

   Delete
 9. நலம்தானே உமையாள்.
  எனது வலைப்பூவில் விருது ஒன்றை உங்களுக்கு பகிர்ந்துள்ளேன்.
  http://piriyasaki.blogspot.de/2014/09/blog-post.html
  வந்து பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழி. வந்து பெற்றுக் கொள்கிறேன்.

   Delete
 10. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்..
   என் முதல் வருகையை பதிவு செய்கிறேன்
   உங்கள் தளத்தில்...

   Delete
  2. தங்கள் முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சகோதரரே.

   Delete
 11. அருமையான உணர்வுக் கவிதை சகோதரி...
  பொதுவாகவே சொந்த ஊருக்கு போவதென்றாலே
  குதூகலம் தான் நெஞ்சுக்கு..
  அதுவும் அன்னையின் மடி...
  அவரின் அன்புச் சிறகிற்குள்
  அடைபட்டுக்கிடக்க ஒரு வாய்ப்பு...
  மனம் விடுமுறையை நாடிவிட்டது எனக்கு...
  கவிதையைக் கண்டபின்...

  ReplyDelete
  Replies
  1. மனம் விடுமுறையை நாடிவிட்டது எனக்கு...
   கவிதையைக் கண்டபின்...//

   ஊர் சென்று மகிழ்ந்து வாருங்கள்.....தங்களின் கருத்திற்கு நன்றி சகோதரரே.

   Delete