Wednesday, 13 August 2014

சிகப்பரிசி கொழுக்கட்டை

சிகப்பரிசி மிகவும் சத்தானது.

அதை சாப்பிடும் போது அதன் சத்துக்கள் முழுமையாக உடலுக்கு
கிடைக்கும். நார்சத்து அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. இவ்வரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் உடலுக்கு போதிய கொழுப்பு கிடைப்பதும். மற்றும் இரத்த அழுத்தத்தையும் தடுக்கிறது. நிறைய சத்துக்களும்,விட்டமின்களும் இருக்கிறது. இவ்வரிசியை சாப்பிடுவதால் உடலில் சர்க்கரை சேர்வது தாமதமாக நடை பொறுகிறது. 

இவ்வரிசி மாவில் கொழுக்கட்டை,பாயசம்,இடியப்பம்,புட்டு,தோசை,இட்லி, என வகை வகையாக பண்ணி சப்பிடலாம். இதன் விலை அதிகம் என்றாலும் பயன்களும் அதிகம் தான்  ருசியும் அதிகம்.
முன்பு இதன் பயன்பாடு அதிகம் இருந்தது. அதிக விளைச்சலும் இருந்தது. 
வெள்ளை தோலுக்கு நாம் பிரியப்படுவது போல் வெள்ளை அரிசிக்கு மாறிவிட்டோம். 

தேவையான பொருட்கள்

சிகப்பரிசி மாவு - 1 கோப்பை
கொப்பரை துருவல் - 4 மே.க
(  Dry Coconut Powder )
உப்பு - தே.அ

பச்சை தேங்காய் இருந்தால் அதை 

பல்லு பல்லாக நறுக்கி போடவும்.





1 1/4 கோப்பை தண்ணீரை கொதிக்க வையுங்கள்.








மாவுடன் உப்பு,தேங்காய் சேர்த்து கலந்து கொள்ளுகள்.



பின் கொதிக்கும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கரண்டிக்காம்பால் கிளறுங்கள். போதுமான அளவு வந்தவுடன் மீதம் நீர் இருந்தால் விட்டு விடலாம். 



தண்ணீர் பற்றவில்லை என்றால்  நீர் சற்று தெளித்து சேர்மானமாக ஆக்கிக் கொள்ளலாம்.
  




மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்









14 comments:

  1. வணக்கம்
    சகோதரி
    சிகப்பரிசி பற்றியும் அதில் செய்யக்கூடிய உணவு வகை பற்றியும் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்நன்றி.

      Delete
  2. விநாயகர் சதுர்த்தி வந்தால் செய்கிறதுதான் பிறகு மறந்து போய் விடுகிறது பிள்ளையாரையும்தான்.

    ReplyDelete
    Replies
    1. விநாயகரை மறக்கலாமா..?

      Delete
    2. SORRY வாழும் சூழல் காரணம் அரபுதேசம்.

      Delete
  3. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தெரியப்படுத்தியதற்கு நன்றி. இதோ காண செல்கிறேன்.

      Delete
  4. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
    சிகப்பரிசியின் நன்மைகளை சொல்லியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  5. சிகப்பரிசிக் கொழுக்கட்டை
    சிறப்பான செய்முறை
    பாராட்டுகள்

    ReplyDelete
  6. கொழுக்கட்டை,மோதகம் பிரியர் என் கணவர். நிச்சயம் செய்துபார்க்கிறேன். ஈஸியாக இருக்கு குறிப்பு. நன்றி

    ReplyDelete
    Replies
    1. சுலபம் தான். சாயங்கால டிபனுக்கு உடனே செய்துவிடலாம்.

      Delete
  7. கொழு கொழு கொழுக்கட்டை. சிகப்பரிசியில் பார்க்க வித்தியாசமா அழகா இருக்கு.

    ReplyDelete