கவிதை முன்னாடி.....!!!
பரிசு பின்னாடி...!!!
கைபேசியில் அழைத்தும் காதலி பேசாததால்... வருத்தமுடன் காதலன் வடிக்கும் கவிதை. ( மனதிற்குள் ஒருதலையாக பாடுகிறான் )
மொழியாள் மொழியவில்லை
கொஞ்சும் மொழி தேனுடையாள்
கோவைப் பழ வாய் மொழியாள்
விஞ்சும் அழகு உடல் மொழியாள் – என்னை
விக்க வைத்த சுந்தரியாள்
பறந்து வந்தேன் பட்டணத்திற்கு
பார்க்கவழியை தொலைத்து விட்டேன்
காலம் பறக்கும் வேளையிலும் – உன்னை
காதலுடன்தான் அழைத்து வந்தேன்
பஞ்சம் பிழைக்க வந்ததினால்
பாவையவள் கெஞ்ச வைத்தாள்
மெளனமொழி பேசியதால் அவள் – என்னை
ஊமையனாய் ஆக்கி விட்டாள்
வரவும் செலவும் கூடுவதால்
வாழ்க்கைக்கு பொருள் தேவையடி
வதங்கி கசங்கி சுற்றுறேனடி – என்னை
வாய்ச்சொல்லில் வீரம் ஏற்றேனடி
மஞ்சள் காஞ்சிப் பட்டுடனே
மணக்க கூடை கதம்பமோடு
கழுத்துக்கு அட்டிகை தானெடுத்து – உன்னை
காணவோடி நான் வாறேன்
அஞ்சுகமே அத்தைமக தஞ்சகமே
அத்தானை நீயும் அகத்தறையில்
பூட்டி வச்சே தெரியுமடி – என்னை
புருஷனாய் தான் நினைத்தாயடி
விருப்பக் கவிதை :
நண்பேண்டா
நண்பேண்டா
அன்பும் பண்பும் இணைந்து கூடி
ஆகும் தோழமை பலம் கூடி
இன்பமும் துன்பமும் கதைக்க கூடி
இணையாய் சுற்றித் திரியக் கூடி
வாக்கிற்கு வல்லமை சேர்ந்து கூடி
மனத்திற்கு உரமாய் ஊக்கம் கூடி
இருப்பதை பகிர்ந்து உண்ணக் கூடி
கூட்டிக் கழிக்காமல் வாங்ககொடுக்க கூடி
உல்லாசம் என்ற சொல்லின் மதிப்பு கூடி
கூட்டாளி என்று சொல்வார் கூடி
பிரிக்க நினைப்பார் சிலர் கூடி
வஞ்சக திரிக்கு தீவைப்பார் கூடி
கட்டிய கூட்டை காக்க கூடி
கட்டியவள் செப்பக் கேளாது கூடி
அமையாதோர் பொறமையில் வெதும்பக் கூடி
மனத்தின் பசிக்கு நேரம் ஒதுக்கி கூடி
காலம் மறந்து மொழிகள் கூடி
கண்டதை எல்லாம் பேசக் கூடி
தோழர்களின் வலிமைத் தோள்கள் கூடி
தொட்ட காரியம் முடிக்க கூடி
தட்டிக் கொடுக்க கைகள் கூடி
தவறாகப் பேச சண்டை கூடி
தூசி தட்டி அழுகையில் கூடி
தோழமையின் சாட்சி கண்ணீர் கூடி
கவிதைகள் இரண்டுமே அருமையாக உள்ளன! வாழ்த்துக்கள் சகோதரி!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரரே.
Deleteபடத்திற் கேற்ற பாடல்!
ReplyDeleteஉங்கள் தலைப்பினுக்கும் ஏற்ற கவிதை
தோழமைக்குக் கண்ணீரைச் சாட்சி வைத்து முடித்த விதம் அருமை!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரரே.
Deleteகொஞ்சும் மொழி தேனுடையாள் கொஞ்சிளாளே...
ReplyDeleteநெஞ்சம் எனதை அடைத்து விஞ்சினாளே...
கள்ளி கருவிழி கொண்ட வஞ்சியாளே...
வெற்றி உமக்கே இன்று வாஞ்சியாளே...
* * * * * * * * * * * * * * *
நண்பர்கள் கூடி
ஆலோசித்தனர் பாடி
வெற்றியை தேடி
இவர்கள் தந்தனத்தம் ஆடி
* * * * * * * * * * * * * * *
கவிதை அருமையாக இருக்கிறது வெற்றி உமதே எமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்,
ஆகா...கவிதையிலேயே பதில்கள்...
Deleteகவிதைகள் வந்து விழுகின்றன...தொடருங்கள்...
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரரே.
ஆஹா!... அருமை! அருமை!
ReplyDeleteவித்தியாசமாகச் சிந்தித்திருக்கின்றீர்கள்.
அதாவது ஒரு காதலன் பாடுவதாய்... நன்றாகவே உள்ளது.
நட்பென்றால் என்றால் கண்ணீர் இல்லாமா?..:)
முடித்த விதமும் சிறப்பு!
இரண்டு கவிதையும் அருமை சகோதரி!
வெற்றி பெற்றிட உளமார வாழ்த்துகிறேன்!
வாழ்த்துக்களுக்கு நன்றி இளமதி.
Deleteதாங்கள் எழுதும், பொழியும் மரபுக்கவிதைகள், வெண்பாக்கள் எல்லாம் எனக்கு தெரியாது.
தங்களைப் போல உள்ளவர்கள் மத்தியில் நானும் பங்கேற்பதே போதும் என விரும்பினேன்.
பங்கு பெற்றதே எனக்கு வெற்றி பெற்ற உணர்வைத்தருகிறது. புதிய அனுபவம்.
அருமையான கவிதை, வெற்றி பெற வாழ்த்துகள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமனத்தின் பசி...// நண்பர்களால் மட்டுமே அடக்க முடியும். மொழியாள் மொழியவில்லை ரசனையான வரிகள்,
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteவா.வ் நீங்களும் கலந்துக்கிறீங்களா உமையாள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக நன்றாகவே எழுதியிருக்கிறீங்க உங்க கவிதையை. மிக ரசனையாக. நன்றி.
நன்றி பிரியசகி
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் இரண்டு கவிதையும் அருமையாக உள்ளது .
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மெளனமொழி பேசியதால் அவள் – என்னை
ReplyDeleteஊமையனாய் ஆக்கி விட்டாள்......
பாடல் நன்றாக இருக்கிறது. நாட்டுப்புற பாடல் மெட்டுபோல இசைக்க .... பாட இனிக்கிறது.
பாடிப் பார்த்து மகிழ்ந்தேன்.
நண்பேண்டா..... கவிதை சூப்பர். நண்பர்களின் இயல்பை சிறக்கச் சொல்லி இருக்கிறீர்கள்.
வெற்றி கிட்ட வாழ்த்துகிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Deleteபஞ்சம் பிழைக்க வந்ததினால்
ReplyDeleteபாவையவள் கெஞ்ச வைத்தாள்
மெளனமொழி பேசியதால் அவள் – என்னை
ஊமையனாய் ஆக்கி விட்டாள் அழகான பொருத்தமான பாடல் பாடி மகிழ்ந்தேன்.
கூடி மகிழும்
நட்பும் கேவி அழும் ! நயந்தாய் இனிதாய் !வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!
தாங்கள் பாடி மகிழ்ந்தது எனக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணியது.
ReplyDeleteநன்றி தோழி.
சிறந்த கவிதைப் படைப்புகள்
ReplyDeleteவெற்றி பெற்றிட வாழ்த்துக்கள்
முடிவுகள் நடுவர்களின் கையில்...
நன்றி ஐயா.
DeleteWow..super kavithaikal valthukal.
ReplyDeletelove poem is very practical....
friends poem excellent..... i love my friends so much.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteநட்புக் கவிதையும் காதல் கவிதையும் செப்பும் வரிகள் அனைத்துமே சிறப்பு !
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள் அன்புத் தோழியே .
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Delete