Monday, 25 August 2014

புதினா தொக்கு




தேவையான பொருட்கள்

புதினா - 1 கட்டு
புளி - சிறிது
உப்பு - தே.அ



தாளிக்க வேண்டியது

மிளகாய் - 2   ( இது காரமான மிளகாய் )  அல்லது 5,6
க.பருப்பு - 1 1/2 தே.க
உ.பருப்பு - 1 1/2 தே.க
கடுகு - 1/2 தே.க
சீரகம் - 1/2 தே.க
எண்ணெய் - 2 மே.க

தாளிக்கவும். பின் புளி , சுத்தம் செய்து  5 , 6 முறை கழுவிய புதினாவை சேர்த்து வதக்கவும்.




புதினாவின் நீர் பதம்  குறைந்தபின் அடுப்பை அணைக்கவும்.

ஆறிய பின் உப்பு சேர்த்து அரைக்கவும்.

தண்ணீர் தேவையில்லை.

கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.








சூடான இட்லி, நெய் சாதம், தயிர் சாதம், தோசை, அடைக்கு அருமையாக இருக்கும். 

ஏன் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தொக்கு கலந்து உண்ண .... உண்ண.... நீங்களே சாப்பிட்டுப் பாருங்களேன்....!!!!

அப்படியே சாப்பிட்டா கூட அருமையாக இருக்கும்....ஆனா வயிற்றுக்கு ஆகாதுல்ல...  ஹி...ஹி...  வரட்டா...!!!


குறிப்பு

தண்ணீர் சேர்க்காமலும், அரைத்ததை கை படாமலும் ( ஸ்பூன் உதவியுடன் ) எடுத்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்துக் கொண்டு உபயோகிக்கலாம் . 4 , 5 நாட்கள் நன்றாக இருக்கும். 





9 comments:

  1. புதினா தொக்கு எனக்கு பிடித்த ஒன்று! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. ஆஹா, புதினா தொக்கு
    வாசனையின்றி தூக்கு தே.....

    ReplyDelete
  3. உடல் நலத்திற்கு உகந்தது..!

    ReplyDelete
  4. புதினா உடலுக்கும் நல்லதாமே இப்படி செய்தால் சிறுவர்களும் விரும்பி உண்ணக் கூடும் நான் செய்து பார்க்கிறேன். நன்றி நன்றி தோடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  5. நன்றி இனியா.

    ReplyDelete
  6. வணக்கம்
    பிடித்த உணவு முறை செய்து பாா்க்கச் சொல்லுகிறேன் அம்மாவிடம் பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete