Thursday, 21 August 2014

சாய் பாமாலை

பாடல் - 18




குருவே குருவே குருபிரம்மா
குறைகள் இல்லை பரப்பிரம்மா

அகிலம் யாவும் ஒருபிரம்மா
அண்டையர் எல்லாம் ஒருபிரம்மா
உயிர்கள் எல்லாம் பரப்பிரம்மா
உணரவேணும் பரப்பிரம்மா                  குருவே              

ஒருமையும் பன்மையும் ஒருபிரம்மா
ஒத்துக் கொள்வதில்லை ஒருபிரம்மா
மாயையில் மதிபோய் சுகபிரம்மா
மகிழ்ச்சி நிலைக்காது சுகபிரம்மா           குருவே    

கண்டேன் உன்னை குருபிரம்மா
காணவில்லை நான் குருபிரம்மா
அறிவில் அறியா பரப்பிரம்மா
அன்பில் உணராத பரப்பிரம்மா               குருவே              

இருளில் இருப்பாய் இறைபிரம்மா
இல்லாது நினைப்போம் இறைபிரம்மா
சூழ்ந்து காப்பாய் தாய்பிரம்மா

சூட்சுமம் போதிப்பாய் தாய்பிரம்மா          குருவே      




10 comments:

  1. பாமாலையை பூமாலையாக கோர்த்தவிதம் அருமை.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete
  3. பாபா மாலை அருமையான மாலையாகியுள்ளது!

    ReplyDelete
  4. பாமாலை மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வணக்கம்
    சகோதரி

    பாடிய பாமாலை நன்று நானும் பாடி மகிழ்ந்தேன்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. சூட்சுமம் போதிப்பாய் தாய்பிரம்மா ஆஹா.... அருமைடா எல்லாம் பார்க்கணும் எங்கே நேரம் தான் கொஞ்சம் இடக்கு பண்ணுது பார்க்கலாம். தொடர வாழ்த்துக்கள்மா .....!

    ReplyDelete