Friday, 1 August 2014

பீன்ஸ் உசிலி

தேவையான பொருட்கள்

பீன்ஸ் - 1/4 கிலோ
வெங்காயம்  (பெரிது ) - 1
து.பருப்பு - 7 மே.க
வரமிளகாய் - 4 அ 5
சோம்பு - 1/2 தே.க
கொத்தமல்லி - சிறிது



பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்துக்
கொள்ளவும்.

பின்பு மிளகாய், சோம்பு.பருப்பைப்
போட்டு கொர கொரப்பாக அரைத்துக்
கொள்ளவும்.




தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 7 மே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
கருவேப்பிலை - சிறிது

தாளிக்கவும்.






வெங்காயம் சேர்த்து வதக்கவும்.






                                                                             


 பீன்ஸ் + பருப்பு அரைத்ததை சேர்க்கவும்.


உப்பு போடவும்    








    நன்கு கிளறி விடவும்.    





மிதமான தீயில் நிதானமாக வேக விடவும்.

கொத்தமல்லி தூவி இறக்கவும்.







                                                                உசிலி ரெடி...!!!


கடைசியாக தேங்காய் துருவல் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
நன்றாக இருக்கும்.

6 comments:

  1. Photoவே கலக்கலா இருக்கே.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி.

      Delete
  2. பார்க்கும் போதே பசியைத் தூண்டுது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஓ... அப்படியா..நன்றி

      Delete
  3. பீன்ஸ் துவட்டல், பீன்ஸ் பொரியல் மாதிரி பீன்ஸ் உசிலியா!!! சூப்பர்

    ReplyDelete
  4. வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி

    ReplyDelete