Monday, 11 August 2014

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையான பொருட்கள்

வெங்காயம் -  1 கோப்பை
தக்காளி - 1
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
சாம்பார்ப் பொடி - 1 தே.க
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தே.அ
மஞ்சள் தூள் - சிறிது






அரைக்க வேண்டியவை

து.பருப்பு - 7 மே.க
சோம்பு - 1 தே.க
வரமிளகாய் - 3

துவரம் பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து விட்டு நீரை வடிகட்டி விடவும். அந்த நீரை கீழே ஊற்ற வேண்டாம்.


து பருப்பு,மிளகாய்,சோம்பு போட்டு
மிக்ஸியில் கொர கொரப்பாக
அரைத்துக் கொள்ளவும்.


அதில் 3/4 கோப்பை வெங்காயம்,பாதி கருவேப்பிலை,பாதி கொத்தமல்லி சேர்த்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.








தாளிக்க வேண்டியது


நல்லெண்ணெய் - 5 மே.க
கடுகு - 1/4 தே.க
சீரகம் 1/2 தே.க
பெருங்காயம் - சிறிது

தாளித்து விட்டு வெங்காயம்,தக்காளியை வதக்கவும்.









புளிக்கரைசலை ஊற்றவும்.












உப்பு,மஞ்சள் தூள்,சாம்பார்ப் பொடி சேர்க்கவும்.



சாம்பார் நன்கு கொதிக்கும் போது
உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை மூன்று,மூன்றாக 1 நிமிட இடைவெளி விட்டு போடவும்.

இல்லையெனில் உருண்டைகள் வேகாது உதிர்ந்து விடும். உருண்டைகள் வேகவும், மிக்ஸி கழுவிய நீரை சேர்க்கவும். குழம்பு சேர்ந்து சரியான பதமாக வரும்.


உருண்டைகளை ஆவியில் அவித்தும் சேர்க்கலாம்.

ஆவியில் அவித்து சேர்க்கும் போது பாதி உருண்டை அளவு தனியாக வேக வைக்காமல் வைத்துக் கொள்ளுங்கள்.

குழம்பு நன்கு கொதித்து உருண்டைகளில் குழம்பு சார்ந்தவுடன் மீதி வைத்து இருக்கும் பாதிஉருண்டையையும், மிக்ஸி கழுவிய நீரையும் சேருங்கள். அப்போது தான் குழம்பு சேர்ந்து வரும்.


முதல் செய்முறைக்கு பாதிஉருண்டை கரைப்பது தேவையில்லை. ஏனெனில் அது வேகும் போதே சற்று குழம்பில் அதன் மாவுத்தன்மை கரைந்து வரும் அதனால் தான்.

கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி இறக்குங்கள்.



                           
                                     பருப்பு உருண்டைக் குழம்பு தயார்...!!!




18 comments:

  1. ஆஹா, பருப்பு உருண்டை கொழம்பா!!, பார்சல் அனுப்ப முடியாதே
    பரவாயில்லை, எப்பவாவது, நான் தங்கள் நாட்டிற்கு வந்தால் கண்டிப்பாக நீங்கள் இதை செய்து கொடுக்க வேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க,வாங்க கண்டிப்பாக செய்து கொடுக்கிறேன்.

      Delete
  2. இப்படி ஈஸியா செய்முறை குறிப்பெல்லாம் அழகாக படங்களுடன் போட்டு தொடர்ந்து அசத்துறீங்க. நிறைய குறிப்பு செய்வதற்கு இருக்கு.உங்களோடதும் சேர்த்து. செய்யவேண்டும்!.
    பாராட்டுக்கள். நன்றி நல்பகிர்விற்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரியசகி. ஓ...அப்படியா..தினம் ஒன்றாக செய்து விடுங்கள். புது புது பதார்த்தங்கள் தான் இனி உங்கள் வீட்டில் என்று சொல்லுங்கள். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

      Delete
  3. எனது அம்மா எனக்காக அடிக்கடி செய்யும் பருப்பு உருண்டை குழம்பு ஞாபகம் வந்து விட்டது....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி

      Delete
  4. சுவையான பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி

      Delete
  5. வணக்கம்

    அருமையான சமையல்குறிப்பு பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி

      Delete
  6. அருமை அருமை!
    எனக்கும் ரொம்பவே பிடிக்கும் இந்தக் குழம்பு.
    நான் எப்பவுமே ஆவியில் வேகவைத்தே சேர்ப்பேன்.
    பருப்பின் பச்சை வாடை வீட்டில்
    அவ்வளவு பிடித்தமில்லை அதனால்.

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி

      Delete
  7. தமிழ் மணம் 1
    ..:)

    ReplyDelete
  8. எனக்கும் இது ரொம்ப பிடிக்கும்.....சமைக்கவும் சாப்பிடவும்........பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி

      Delete
  9. ஆஹா ..இப்போதே செய்து சாப்பிட வேண்டும் போல் உள்ளது இலகு முறையில்
    சிறந்த பட விளக்கத்துடன் இட்ட பகிர்வுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் தோழி .

    ReplyDelete
  10. அருமையான பருப்புருண்டை குழம்பு நன்றாக இருக்கிறது.

    ReplyDelete