காலார
நடக்கலாம் வாங்க…!
மயக்கமாய் கண்கள் திறந்து
பார்ப்பது போல்….பனிமூட்டமான காலை வேளை….அந்த காலனி உறங்கிக் கொண்டு இருந்தது. சில
நாய்களைத் தவிர…
குழந்தையின்
சிரிப்பலை போல் சுகமாய் காற்று
தழுவிற்று.
நடைப் பயிற்சிக்காய் கால்களை…நகர்த்தினேன் கண்களையும் உடன் சேர்த்து.கதிரவன்
வரவர தன் இதழ்களை முழுமையாய் விரித்து சிரிக்க காத்திருந்தன மலர்கள். நறுமணம் நாசியில்
ஏற... என்ன ஒரு இயல்பான தன்மை இயற்க்கைக்கு…! மனமும் நானுமாய் நடப்பதே…தனி சுகம்,அதுவும்
காலை வேளையில்….சில வற்றை சுட்டிக் காட்டி என்னை வியக்கவும், சிந்திக்கவும் வைக்கும்.
ஆகையால் தானே இதை நான்
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்… பரிச்சயமான முகங்களுக்கு புன்னகை பரிமாறி நகர்கிறேன்.
வானம் என்னவோ…பக்கத்தில்
உள்ளது போல் தோன்றிற்று. காஸ்மிக் எனர்ஜி என்னைக் கட்டி அணைத்தது போல் உணர்ந்தேன்……ஓ…இது
தானா அது…! அமைதியாய் இருந்தால் அல்லவா தெரிகிறது…! உடலும் மனமும் புத்துணர்சியுடன் இருக்க,
சுகமாய் கண்களை மூடியபடி நடக்க வேண்டும் போல் எண்ணம்… முடியுமா..? அதுவும் நம் ரோட்டில்..பார்த்து வரும் போதே பார்த்து
ஏற்றுவான்….
வழக்கமாய் திரும்பும்
இடம் வரவும் திரும்பினேன். இயற்க்கையுடன் இருக்க நாளைக் காலை வரை காத்திருக்கத்தான்
வேண்டும் இல்லையா…? இன்றைய காலகட்டதில்…! என்ன நான் சொல்வது…?
மேகங்களின் ஊடே
சூரியனின் பாய்ச்சல் பல டார்ச்லைட்டின் ஒளி போல் ஓவியம் படைத்தன. வீட்டை நோக்கி கால்கள்
விரைந்தன.
உங்களுக்கும் காரியங்கள்
இருக்கும் இல்லயா…? நண்பர்களே… நாளை சந்திக்கலாம். என்னுடன் நடை பயின்றதற்கு நன்றி.
ஆர்.உமையாள் காயத்ரி.
Chitti Super.
ReplyDeletesuper...
ReplyDeleteNice one periyamma!!!
ReplyDelete