தேவையானவை
வாழைப்பூ - 1/2 பூ
வெங்காயம் - 1 அல்லது சின்ன வெங்காயம் - 10
கருவேப்பிலை - சிறிது
து.பருப்பு - 4 மே.க
க.பருப்பு - 2 மே.க
மிளகாய் - 6 - 8
சோம்பு - 1/2 தே.க
உப்பு - தே.அ
மஞ்சள் தூள் - சிறிது
தேங்காய் துருவல் - 3 மே.க
தாளிக்க
எண்ணெய் - 6 மே.க
கடுகு - 1/4 தே.க
உ . பருப்பு - 1/2 தே.க
வாழைப்பூவில் உள்ள நரம்பை எடுத்து விட்டு சிறிதாக நறுக்கி மோர்கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
வாணலியில் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பதமாக வேகவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்கவும்.
வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
வேகவைத்த வாழைப்பூவை சேர்த்து
இரண்டு கிளறு கிளறி விடவும்
பருப்புகளை 1/2 மணி நேரம் ஊறவிட்டு தண்ணீரை வடிகட்டி விட்டு, சோம்பு, மிளகாய் சேர்த்து கொர,கொரப்பாக அரைத்து சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு வேகவிடவும். கடைசியாக தேங்காய் சேர்த்து கிண்டி இறக்கவும்.
தேங்காய் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லை என்றாலும் நன்றாக இருக்கும்.
அனைவருக்கும் பிடித்தமான ஐயிட்டம்
ReplyDeleteசகோ நலமா ?
த.ம.
நலம் சகோ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.
Deleteநாங்க அரைத்த பருப்புடன், வாழைப்பூவை கலந்து இட்லிப்பானையில் வேகவைத்து பின் வெங்காயம் தாளிப்பில் கொட்டி கிளறவோம்
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி. சகோ
Deleteவாழைப்பூ பருப்பு உசிலி பார்க்கவே ஜோர் ஜோர் ! பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி ஐயா
Deleteவாழைப்பூ உசிலி நல்லாருக்கே ..வீட்ல இருக்கு நாளைக்கு செய்றேன்
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி ஏஞ்சலின். செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் சகோ.
Deleteஹை உமையாள் ரொம்ப நாளாச்சு...வாங்க வாங்க....
ReplyDeleteஇதே ரெசிப்பியும் செய்தது உண்டு...ஆனால் பொதுவாக...வெங்காயம், சோம்பு சேர்க்காமல் செய்வது....
சூப்பர் ரெசிப்பி
கீதா
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சகோ.
Deleteஆம் சகோ ரொம்ப நாட்கள் ஆகி விட்டது.
வீட்டில் அம்மணி செய்வாங்க...
ReplyDeleteவாழைப்பூ வடையும் செய்வாங்க...
நல்ல பகிர்வு அக்கா...
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சகோ.
Deleteசிறந்த செய்முறை வழிகாட்டல்
ReplyDeleteஅருமையான பதிவு
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சகோ
Deleteவெகு நாட்களுக்குப் பிறகு.. நல்லதொரு பதிவு..
ReplyDeleteவாழ்க நலம்!..