பேசா வார்த்தைகளுக்கு நாம் எஜமான்...!
பேசும் வார்த்தைகளுக்கு
நாம் பொறுப்பு...
பேசா வார்த்தைகளுக்கு
நாம் எஜமான்...
மிதமாய் பேசுதல் நலம்....
மிகுதியாய் பேசுதல் துயரம்...
நினைத்ததை எல்லாம் பேசுவது
நிந்தனையைக் கூட்டி வரும்
மெளனம் சாலச்சிறந்தது…
மெளனமாய் இருப்பது மிகக் கடினம்…
கடினம் தான் காலத்தின் கனி
காத்திருப்பது தான் கடினம்…
சூதும் வாதுமாய் சுற்றித் திரியாமல்
சூதுகவ்வும் வார்த்தைகளினால்
பரிதாப பார்வை நடிப்பினால்
உங்களைத் தொலைக்காதீர்கள்
வாழும் வரை உண்மையாய் இருத்தல்
வழு சேர்க்கும் வழ்க்கைக்கு
வைராக்கியமான நேர்மை இருந்தாலே
வாழ்க்கை எளியது தான்
ஒரு புன்முறுவல் போதும்
ஒரு அன்புப் பார்வை போதும்
ஒரு அரவணைப்புச் சொற்கள் போதும்
ஒரு மெளனத்தின் சமிக்கை போதும்
அருமையான பொன்மொழிகள் சகோ.
ReplyDeleteநல்ல கவிதை. பாராட்டுகள்.
ReplyDelete