Monday 11 November 2019

மழலை மொழி / Baby Talk

















மழலை மொழி
மாறாத தொனி
அன்பின் மொழி
ஆரவாரம் தனி




கேட்கும் காதுகள்
இன்பத்தின் வழி
பார்க்கும் போதே
பரவசம் பொங்குதே



















சிரிப்பின் மொழி
சிருங்கார வேணுகானம்
கால் தூக்கி அசைந்தாட
நடராஜனின் நர்த்தனம் கண்டேன்

கால் பெருவிரலைக்
கவ்விடும் கொவ்வை இதழ்
ஆலிலைக் கண்ணனோ
அவதரித்தான் இல்லத்திலே....!

பசித்திட்ட வேளையில்
செல்லச் சிணுங்கள் கண்டேன்
பொறுமையாய் காத்திருப்பாய் 
பாலமுதுண்ண நீ












செந்தமிழ்ச் செல்வன் நீ
ம்...உ..ம்..உ... வென பாட்டிசைப்பாய்
விரல் கொண்டு கரம் பிடிப்பாய்
விலகாதோ என்நோய் தான்

விடிகாலை விழித்திடுவாய்
விண்ணவரோடு உரையாட
மக்களோடு உறவாடி
மகிழ்விக்கச் செய்திடுவாய்





















இறைவடிவாய் நீவந்து  
இல்லத்தில் உதித்திட்டாய்
உதய சூரியனாய்
பிரகாசிக்கச் துவங்கிட்டாய்

சாகசங்கள் செய்திடுவாய்
சதுரங்கம் விளையாடி
மொழியுடன் விளையாடி
உலகத்தை கவர்ந்திடுவாய்





















உள்ளமெல்லாம் உருகுதைய்யா
உன்னைக் காணும் பொழுதெல்லாம்
உன் மலரடி காண்கையிலே
மனமெல்லாம் நிறையுதைய்யா

மனமெல்லாம் குளிர்ந்ததையா
மன்னன் உன்னைக் கையிலேந்த
அருள் நிறைந்து வந்ததினால்
அகமெல்லாம் நிறையுதையா.



புகைப்படங்கள்  - கூகுள்
நன்றி

5 comments:

  1. அழகான வரிகள்....

    ரசித்தேன்...

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    அழகான படங்களுடன் அற்புதமான மழலை மொழி கேட்டேன். மழலை மொழிகள் என்றுமே இனிமையானவைதான். அதுவும் இறையருளாக சேர்ந்து வந்த மழலைச் செல்வங்களின் மொழிகள் கேட்க கேட்க திகட்டாதவை.. தங்கள் கவிதை அழகான வரிகளுடன் நன்றாக இருந்தது. மிகவும் ரசித்தேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. அழகான படங்களுடன் அருமையான கவிதை.

    ReplyDelete
  4. படங்களும், கவிதையும் அருமை உமையாள்.

    கேட்கும் காதுகள்
    இன்பத்தின் வழி
    பார்க்கும் போதே
    பரவசம் பொங்குதே
    குழந்தையின் மழலை இன்பத்தின் வழிதான்.

    ReplyDelete
  5. This is such beautiful poem.
    Loved the lines - "Please pray
    You got home
    The rising sun
    You started to shine"
    Etizolam RX

    ReplyDelete