Friday, 27 May 2016

அக்காய்க்கு இக்காய் ...

முந்தய பதிவு "கத்தரி" கவிதைக்கு சகோ ஶ்ரீராம் அவர்கள் கீழ் கண்டவாறு  கருத்து எழுதி இருந்தார்கள்

// ஆமாமாமாம்.. ரொம்பவே தாங்க முடியவில்லை.. அப்படியே அடுத்த கவிதையா இப்போ உச்சத்தில் நிற்கிற காய்கறி விலைகளைப் பற்றியும் எடுத்து விடுங்க.//

 ஆகையால் இந்தக் கவிதை + குறள்.....உதித்தது. 

நன்றி சகோ.





பீன்ஸ் விலை கேட்டு பீதி வந்து போச்சு
பட்டாணி விலை கேட்டு பயம் வந்து போச்சு
அவரை விலை கேட்டு அவதியாச்சு
கேரட் விலை கேட்டு கண்ணுல தண்ணி வந்திடுச்சு
டபிள் பீன்ஸ் கேட்டு தலை ரெண்டாச்சு

சுத்திமுத்தி பார்த்தேன்....
சுரனைவர கையைக் கிள்ளிப் பார்த்தேன்...
தங்க மாளிகைக்கு வந்தோமோன்னு...!!!
தலை சுத்தி பார்த்தேன்....

சே...சே...நாம சரியா
காய்கடைக்குத்தான் வந்தோம்ன்னு
கண்ணுல நீரு மறைக்க நின்னேன்...

சுரக்காய் எனைப்பார்க்க சுறுசுறுப்பாச்சு
புடலங்காய் எனைப்பார்த்து புன்முறுவல் காட்டிச்சு
வாழைத்தண்டு வாவான்னு கூப்பிட
கீரைத்தண்டு கிளுகிளுப்பை  ஆட்டிச்சு
பாவக்காயோ பக்கம் வந்து நின்னுச்சு

பச்சை மிளகாயோ பார்க்க காரம் ஏறிச்சு
பெரிய வெங்காயமோ பரவாயில்லை வான்னுச்சு
உருளைக்கிழங்கோ உசுப் பேத்தி உருண்டுச்சு
குடமிளகாயோ குடலைக் கலங்க வைச்சுச்சு

சின்ன வெங்காயம்  முன்னே போக
தக்காளி தாவிதாவிப் போக
பொன்னிற சாம்பார் வைக்க
போட முடியல சின்ன வெங்காயத்தை
வெங்காயமில்லா சாம்பார்  கொதிக்க...

தக்காளியை வகுந்து பாகம் வைக்க
சாம்பாரும் ரசமும் ஒத்துக் கொண்டது
வேறவழி வந்த வரைக்கும் லாபம் நமக்குன்னு..


நாட்டுக்காய் தான் நட்பாகிப் போச்சு
நாம் வாழ நேசம் கலந்து உயிராகி நின்னுச்சு
நட்பு நம்மை சமாளிக்க வைக்கும்....
எக்காலத்திலும் நண்பேண்டா...






குறள் 

அக்காய்க்கு இக்காய் மேலென்போர் மக்கள்
காலம் காய்த்த காய்




படம் கூகுள் நன்றி


19 comments:

  1. குறளோடு கருத்துப் பகிர
    பாவோடு போட்டு உடைத்தீர்
    நாவூற நல்ல காய்கறி!

    ReplyDelete
  2. ஆஹா... அருமை. நன்றி. குறளும் பிரமாதம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களால் அல்லவா இப்பதிவு உதித்தது நன்றி சகோ

      Delete
  3. அருமை அருமை ...http://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
  4. அடடே கவிதையின் நடையே வித்தியாசமான பாணியில் செல்கின்றதே... அருமை சகோ வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. நடப்பை கவிதையாக்களில்....நடையே வித்தியாசமாகி வந்து விட்டது....நன்றி சகோ

      Delete
  5. காய்கறி விலை ,சிக்கன் விலையை விட அதிகம் ,நாட்டிலே 'என்வி'காரர்கள் பெருகிவிடுவார்கள் போலிருக்கே :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆச்சரியமில்லை...நன்றி ஐயா

      Delete
  6. அக்காய்க்கு இக்காய் அருமை.

    ReplyDelete
  7. அருமை....குறள் சூப்பர்..!!

    ReplyDelete
  8. கவிதையை ரசித்துப் படித்தேன் !

    ReplyDelete
  9. காய்கறிக் கவிதை நல்ல யாதார்த்த வரிகள் சுமந்தும் வலி சுமந்தும்,,,/

    ReplyDelete
    Replies
    1. வலியால் வந்த கவிதை...நன்றி சகோ

      Delete
  10. Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      Delete