Friday, 20 May 2016

தக்காளி குருமா






தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1
தக்காளி – 2
பூண்டு – 8
கருவேப்பிலை – சிறிது

அரைக்க
தக்காளி – 1
தேங்காய் – ¼ மூடி
கசகசா – ¼ தே.க
மிளகாய் -3-
பொட்டுக்கடலை – 1 மே.க

தாளிக்க வேண்டியவை
எண்ணெய் – 2 மே.க
சோம்பு – ¼ தே.க
ஏலக்காய் – 1


                                          தாளிக்கவும்
 









வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.













பூண்டை போட்டு வதக்கவும்.








தக்காளி,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.




அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தேவையான தண்ணீர் + உப்பு சேர்த்து 1 விசில் விடவும்.




கமகமக்கும் கலர் புல் குருமா ஆச்சு.



அடை, இட்லி, தோசை, சப்பாத்திக்கு சூப்பரான குருமா....தயாராகி விட்டது




11 comments:

  1. http://honeylaksh.blogspot.in/2016/05/blog-post.html

    மிகவும் அருமையான தக்காளி குருமாவுடன் மேற்கண்ட பதிவுக்கு வருகை தாருங்கள். :)

    ReplyDelete
  2. சூப்பர் குருமா. நானும் இதைப் போல தான் பண்ணுவேன்.. சோம்பு, கசகசா வறுத்து வெங்காயம், தேங்காய் வதக்கி அரைத்து செய்வேன்..

    ReplyDelete
  3. பதிவே இத்தனை ருசியா. . . ?
    நாளைக்கே செய்து பார்க்கலாம்...

    ReplyDelete
  4. செய்ய எளிதானது
    சுவைக்க ருசியானது
    எனக்கு மிகவும் பிடித்தது
    அற்புதமான புகைப்படங்களுடன்
    பகிர்ந்த விதம் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  5. மிக எளிமை. அருமையாகவும் இருக்கும் என்று தெரிகிறது.

    ReplyDelete
  6. கிட்டத்தட்ட இதே ரெசிப்பிதான் உமையாள். தக்காளியைச் சிறிய துண்டுகளாக வெட்டிச் சேர்ப்பேன். இனி அரைத்தும் சேர்த்துச் சுவைக்கின்றேன் உங்கள் ரெசிப்பியை. பகிர்விற்கு மிக்க நன்றி உமையாள்...

    ReplyDelete
  7. தக்காளி குருமா பார்க்கவே சூப்பரா இருக்கு சகோ.

    ReplyDelete
  8. குருமா ஸூப்பராகத்தான் இருக்கு
    த.ம. 3

    ReplyDelete
  9. சுவையான ரெசிப்பி... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  10. சுவையான குருமா பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete