தேவையான பொருட்கள்
கோதுமை ரவை - 2 கோப்பை
இட்லி அரிசி - 1 கோப்பை\
உளுந்து - 1/4 கோப்பை
வெந்தயம் - 1 தே.க
உளுந்தை தனியாக களைந்து, நீர் சேர்த்து 3/4 மணி நேரம் ஊற விடவும்.
மற்ற அனைத்தையும் களைந்து, நீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற விடவும்.
உளுந்தை தனியாக அரைத்து எடுத்த பின், அரிசி, கோதுமை, வெந்தயத்தை சேர்த்து அரைத்து விட்டு உளுந்துடன் உப்பையும் சேர்த்து கரைத்து வைக்கவும்.
அடுத்த நாள் இட்லியாக வார்க்கவும்
கோதுமை இட்லியை சுவைக்கலாம்....இங்கு தக்காளிச் சட்னியுடன்....
கோதுமை ரவை போட்டு உப்புமா, கஞ்சி செய்வோம். இது போலச் செய்ததில்லை. ஒருமுறை முயற்சித்து விடலாம். என்ன, மணல் மணலாக இடைவெளிகளுடன் இட்லி இருக்கும்!
ReplyDeleteதம +1
மணல் மணலாக இடைவெளிகளுடன் இட்லி இருக்கும்!//
Deleteகோதுமையை அரைத்து விடுகிறோமில்லையா....ஆகையால் மணல் மணலாக இருக்காது. கோதுமையின் தோல் நிறம் அப்படி இருப்பதால் பார்க்க அப்படித் தெரிகிறது:)
ஆஹா கோதுமையில் இட்லியா...?
ReplyDeleteஆமாம் சகோ...நல்லா இருக்கும்....
Deleteஆஹா நம்ம கொழுப்பு கொறஞ்சுருமே....
ReplyDeleteசமைக்கலாமா,வேண்டாமா...?
சகோவின் செய்முறை விளக்கம் வேற
சிம்பிளா இருக்கு...
சரி சமைத்து சாப்பிட்டு பார்ப்போம்
ஆஹா! கோதுமை உப்புமா பிடிக்காத என் கணவருக்கு இந்த இட்லி செய்து கொடுக்கலாம்.
ReplyDeleteநன்றி உமையாள்.
உமையாள் செய்வதுண்டு. அதுவும் அடிக்கடி....இனிமையானவள் இல்லையா அதனால் ஹிஹிஹி.... நான் அரிசி சேர்க்காமல், கோதுமை ரவை மிகவும் பொடியாக ரவை போன்று இருக்குமே அதை 4 பங்கு, ஒரு பங்கு உளுந்து, கொஞ்சம் வெந்தயம் போட்டு ரவையை ஜஸ்ட் ஊற வைத்து வெந்தயம் உளுந்தை நன்றாகப் பொங்கி வர அரைத்து விட்டு கலந்து விடுவேன். உங்கள் அளவுகளையும் குறித்துக் கொண்டேன். இதையும் செய்து பார்த்துவிடுகின்றேன்.
ReplyDeleteபகிர்விற்கு மிக்க நன்றி உமையாள்
கீதா
கோதுமை இட்லி. வித்தியாசமாக இருக்கிறது. செய்து பார்க்க வேண்டும்...
ReplyDeleteகோதுமை இட்லி அவசியம் செய்துவிட வேண்டியது தான்,,, பகிர்வுக்கு நன்றி,,
ReplyDelete