Thursday, 18 August 2016

கோவக்காய் பொரியல்






தேவையான பொருட்கள்

பெரிய வெங்கயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 4 அ 5
கருவேப்பிலை - சிறிது
கோவக்காய் - 300கிராம்
தனியாத்தூள் - 1 1/2 தே.க
மிளகு சீரகத்தூள் -  1 தே.க
உப்பு - ருசிக்கு

தாளிக்க வேண்டியவை

எண்ணெய் -  3 மே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
க.பருப்பு  1/2 தே.க
சோம்பு - 1/2 தே.க





                                               தாளிக்கவும்.





ப.மிளகாய் + கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்




வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்




தக்காளியை சேர்த்து வதக்கவும்.




கோவக்காய் + உப்பு சேர்த்து வதக்கவும்.




                              வதங்கிய பின்



தனியாத்தூள் + மிளகு, சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
 


                   வித்தியாசமான, சுவையான கோவக்காய் பொரியல்......









10 comments:

  1. வாரம் ஒரு நாள் கோவைக்காய் பொரியல் தான்..

    எளிமையாக விரைவாக சமைத்து விடலாம்..
    சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு மிக நல்லது..

    ReplyDelete
  2. கோவக்காய் பொரியல் சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  3. கோவைக்காய் பொரியல் - செய்வதுண்டு. சில மாற்றங்களோடு! :)

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    அருமையான கோவைக்காய் பொரியல்! படங்கள், கண்களையும், நாவையும் கவர்ந்திழுக்கிறது. விளக்கங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. இங்கு (யு எஸ் ) கிடைக்கிறதே என்று
    வாங்கி சமைத்துப் பார்த்தோம்
    அவ்வளவுச் சுகப்படவில்லை
    உங்கள் பதிவுப்படி அடுத்தவாரம்
    முயற்சிக்கலாம் என உள்ளோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஆஹா... நாளை மதியம் கோவக்காய் பொரியல்தான்...

    ReplyDelete
  7. கோவைக்காயை தெலுங்கில் தொண்டைக்காய் என்பார்கள் எனக்கு அவ்வளவாக ருசிக்காது

    ReplyDelete
  8. அட! தக்காளி மட்டும் சேர்த்தது இல்லை...அதுவும் சேர்த்து செய்துவிடலாம் சூப்பர்!!!

    கீதா

    ReplyDelete
  9. வெங்காயம், தக்காளி போடாமல் சீரக மிளகுத் தூள், தனியா போடாமல் செய்வதுண்டு. இப்படி ஒருமுறை செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  10. வணக்கம் சகோ !

    உமையாளின் உணவுமுறை பழகிக் கொண்டால்
    எமைவாட்டும் தொல்வினைகள் அறுந்து போம் !

    பார்க்கையில் ருசிக்கிறது வாழ்த்துகள் சகோ
    வாழ்க நலம் !
    தம +1

    ReplyDelete