தேவையான பொருட்கள்
மிளகு - 1 சிறிய கோப்பை
சீரகம் - 1 சிறிய கோப்பை
மிளகாய் - 3
இவற்றை மிக்ஸியில் இட்டு பொடித்துக் கொள்ளவும்.
நிறைய பேருக்கு தெரிந்து இருக்கலாம். புதியவர்களுக்கு பயன் படுமென்று பதிவாக இட்டேன்.
இப்பொடியை சூப், ரசம், பொங்கல், உருளைக்கிழங்கு பொரியல், வாழைக்காய் பொரியல்...இது போன்று வாயு பதார்த்த சமையலில் கொஞ்சம் சேர்த்தால் வாயுவுக்கு நல்லது....நம்மிடம் அடைப்பட்டு கிடக்காமல்....போய்விடும் அல்லவா....?
மிளகாய் போட்டு இருக்கே பொங்கலுக்கு ருசி மாறாதான்னு சந்தேகம் சிலருக்கு வரலாம்......தெரியவே தெரியாது....ஹிஹி....
ஆமாம் உமையாள்! புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள குறிப்புதான். இது கைவசம் என் வீட்டில் எப்போதும் இருக்கும். இதில் பூண்டும் போட்டு தேவையான சமயத்தில் ஒரு சுற்று சுற்றி எடுத்தால் ரசம் செய்துவிடலாம்.
ReplyDeleteகீதா
நான் பூண்டை தட்டி விட்டு இப்பொடியை சேர்த்து போட்டு விடுவேன்.
Deleteவருகைக்கு நன்றி சகோ
நல்ல குறிப்பு. நன்றி.
ReplyDeleteசீரகம் தனியாக பொடி செய்து வைத்து இருக்கிறேன்.
வருகைக்கு நன்றி அம்மா
Deleteஆம்லேட் மேல் தூவி சாப்பிட்டாலும் படு டேஸ்ட்:)
ReplyDeleteகேள்விப்பட்டு இருக்கிறேன் :)....
Deleteவருகைக்கு நன்றி ஐயா
மிளகாய் போடாமல் மிளகு, சீரகம், பெருங்காயம் மட்டும் போட்டு அரைத்து வைத்து சூடான சாதத்தில் நெய் போட்டு கலந்து சாப்பிடுவோம். எங்கள் ப்ளாக்கிகிலும் பதிவு போட்டிருக்கிறேன். எப்பொழுதும் வீட்டில் ஸ்டாக் இருக்கும். ரசம் இறக்கும் சமயம் அதிலும் ஒரு சிட்டிகை தூவுவோம்.
ReplyDeleteமிளகாய் போடாமல் மிளகு, சீரகம், பெருங்காயம் மட்டும் போட்டு அரைத்து வைத்து சூடான சாதத்தில் நெய் போட்டு கலந்து சாப்பிடுவோம்//
Deleteநெய் கக்கலில் இப்பொடியை கலந்து சாப்பிடுவோம்.
பெருங்காயம் சேர்த்து பொடித்து சாப்பிட்ட வேணும், நல்ல ஐடியாவாக இருக்கு...ரசத்துக்கு போட்டு சாப்பிட்டு விடுகிறோம். வருகைக்கு நன்றி சகோ
அடிச்சி வச்சிக்குவோம் அம்மா...
ReplyDeleteஉங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் சகோ
Deleteவருகைக்கு நன்றி
இதுவரை கேள்வியே படாததோர் புதுமைப் பதிவினைப் பார்த்தேன் .... படித்தேன் .... உடனே சாப்பிட்டதெல்லாம் ஜீரணமாகி விட்டது.
ReplyDeleteஇப்போ பசியைக் கிளப்பி விட்டுடுச்சு. மீண்டும் சாப்பிடப்போகிறேன். பகிர்வுக்கு நன்றிகள்.
அருமை.
ReplyDeleteத ம 3
அருமையா இருக்கு குறிப்பு .. மிளகாய் சேர்ப்பது இப்போதான் பார்க்கிறேன் ...முயற்சி செய்து பார்க்கிறேன்
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநல்ல குறிப்பு. குறிப்பாக தாங்கள் கூறுவது போல் வாயு பதார்த்தங்களுக்கு நல்லது. ஜலதோஷம், இருமல் பொழுதிலும் பலன் தரும். பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல குறிப்பு.
ReplyDeleteஇங்கு (தற்சமயம் நான் அமெரிக்காவில் )
ReplyDeleteஉங்கள் பதிவுகள்தான் அதிகம் உபயோகப்படுகிறது
நாளை இந்தப் பொடிதான்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்