Monday, 8 August 2016

வெஜ் ஆம்லெட்/Veg Omelet






தேவையான பொருட்கள்

கடலைமாவு - 1 கோப்பை
கோதுமைமாவு - 1 கோப்பை
அரிசி மாவு - 1 கோப்பை
கொத்தமல்லி - 1 கைபிடி
புதினா -1 கைபிடி
பச்சை மிளகாய் - 3 அ 4
சீரகம் - 1 தே.க
உப்பு - தேவையானது
எண்ணெய் - தேவையான அளவு

க.மாவு, கோ.மாவு, அரிசி மாவு இவை மூன்றையும்  எடுத்துக் கொண்டு.
உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.




கொத்தமல்லி, புதினா,சீரகம், ப. மிளகாய் , தேவையான  தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

15 நிமிடங்கள் ஊற விடவும்.


 தோசைக்கல்லின் ஓரத்தில் இருந்து மாவை ஊற்றி வரவும். எண்ணெய் விடவும்.

( ரவா தோசை வார்ப்பது போல)



திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு வேகவைத்து  எடுக்கவும்.



                                                        வெஜ் ஆம்லெட் தயார்...!!!


சும்மா எளிதாக இப்படி செய்யலாம். காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். காரமா தொட்டுக்க இருந்தால் போதும்.....

அடுப்படிக்கு போனோமா
அள்ளி போட்டு சமைத்தோமான்னு
சில நேரங்களில் இருக்கும் இல்லையா...
அப்ப இப்படி செய்யலாம்....
புதிதாவும் ஆச்சு...
சுவையாவும் ஆச்சு..!
இருக்கும் சாமானை வைத்தும் ஆச்சு....:)))....








11 comments:

  1. அப்படியா.. செய்து விட்டால் போகிறது!..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. ஆஹா... அருமை, அருமை. ஆம்லெட் என்றால் வெங்காயம் மஸ்ட் இல்லையோ....!

    ReplyDelete
  3. ஓ உமையாள் பல நாட்கள் ஆகிவிட்டதே தங்களைப் பார்த்து...வலைப்பக்கம்.

    இந்த வெஜிடெபிள் ஆம்லெட் கோதுமை மாவு சேர்க்காமல் செய்வதுண்டு. வெங்காயம், காரட் துருவி சேர்ப்பதுண்டு. மற்றதெல்லாம் அதே...மிகவும் சுவையுடன் இருக்கும் தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமலேயே அப்படியே சாப்பிட்டு விடலாம்...

    கோதுமை மாவு சேர்த்தும் செய்து பார்த்துட்டா போச்சு.

    பகிர்வுக்கு மிக்க நன்றி உமையாள்.

    கீதா

    ReplyDelete
  4. ஆம்லெட் என்றாலேயே முட்டை ஞாபகம்தான் வருகிறது பச்சை மிளகாய் புதினா கொத்துமல்லி இவைதான் வெஜிடபிள்களா

    ReplyDelete
  5. ஆஹா பார்ப்பதற்கே இவ்வளவு அழகாக இருக்கின்றதே.
    த.ம. 3

    ReplyDelete
  6. வெஜ் ஆம் லேட் ரெடி/

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி

    நலமா? நல்ல சுவையான உணவை அறிமுகபடுத்தியிருக்கிறீர்கள்! கடலைமாவும் சேர்ப்பதால் அடையின் ருசியும்.வந்து விடும். பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி. சூழ்நிலைகள் வலைப்பக்கம் வர நீண்ட இடைவெளிகள் ஏற்படுத்திவிட்டன. உங்களுக்கு செளகரியபடும் போது என் வலைத்தளம் வந்தால் மகிழ்வடைவேன். நன்றி!

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. வித்தியாசமாக இருக்கிறது. செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  9. சென்னையில் முட்டை ஆம்லட்டே இப்படித்தான் செய்கிறார்கள்; பாதி முட்டையில் இந்த மாவு, வெங்காயம் போட்டால் மிலிடரி கடை ஆம்லட். அதை ஒரு நாள் கடைசியாக சாப்பிடும் போது...ஆறிய முட்டை ஆம்லட் பல்லை இளித்தது...மாவு கலந்த முட்டை; ஒரு கோழி முட்டையில் இரண்டு ஆம்லட்--தமிழன் எதையும் கலக்காமல் கொடுக்கமாட்டான் போல!

    ReplyDelete
  10. வித்தியாசமாய் ஒரு ரெசிப்பி. செய்து பார்க்கலாம்!

    ReplyDelete
  11. ஆஹா... செய்து பார்த்திடலாம்...

    ReplyDelete